Pages

Wednesday, August 12, 2015

அதிரை தமுமுக பொதுக்குழு கூட்டத்தில் பிலால் நகர் - சிஎம்பி லேன் பகுதி கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவு !

தமுமுக அதிரை பேரூர் பொதுக்குழு கூட்டம் மரைக்கான் அப்துல் கபூர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமுமுக அதிரை பேரூர் செயலளார் ஏஆர் சாதிக் பாட்சா தலைமை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் அதிரை அஹமது ஹாஜா, மாவட்ட துணை செயலாளர் மதுக்கூர் ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக அதிரை பேரூர் நிதி நிலை அறிக்கையை பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி எடுத்துரைத்தார். கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டது. கூட்ட முடிவில் தமுமுக அணி பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது, உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பிலால் நகர் பகுதி கோரிக்கை மற்றும் சிஎம்பி லேன் பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்கள் சரிசெய்ய சம்பந்தப்பட்டோரை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த தமுமுக பொதுக்குழு கூட்டம் 12 வது வார்டில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்ட முடிவில் தமுமுக அதிரை பேரூர் துணை செயலாளர் கமாலுத்தீன் நன்றி கூறினார். இதில் தமுமுக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...