Pages

Tuesday, August 4, 2015

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையிலிருந்து உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை, குழந்தைகள் நலத்துறை  மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பேரணியை தொடங்கி வைத்து கூறியதாவது:
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்மார்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடத்தப்படுகிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டி, குழந்தைகளை நல்ல ஆரோக்கியமாகவும், நல்ல சந்ததியினராக வளர்க்க வேண்டும்.  குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி உள்ள ஒரு உணவாக தாய்ப்பால் விளங்குகிறது.  இரண்டு ஆண்டுகள் தாய்பால் கொடுக்க வேண்டும். தாய்க்கும் சேய்க்கும் உள்ள பந்தம் தாய்ப்பாலின் மூலம் தான் ஏற்படுகிறது.  தாய்ப்பால் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய அதிக சத்து நிறைந்த பாதுகாப்பான உணவு பொருளாகும்.  சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதினால் குழந்தை பிறந்து 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.  6 மாதம் வரை குழந்தைகளுக்கு எந்த இணை உணவும் தேவையில்லை. தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.  தாய்ப்பால் 2 வயது வரை கொடுக்க வேண்டும்.  தாய்ப்பால் குழந்தையின் தேவைக்கேற்ப கொடுக்க வேண்டும். குழந்தை எந்தவித நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது.  தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் ஊட்ட வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பேரணியில் தஞ்சாவ10ர் மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியர்கள்,  பயிற்சி செவிலிய மாணவ மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பாரத் கல்லூரி மாணவர்கள், ஷர்லின் மேரின் மாணவர்கள்,  ஊட்டச் சத்து பணியாளர்கள் பங்கேற்றனர்.

சுமார் 1000 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையிலிருந்து சோழன் சிலை, தென்கீழ் அலங்கம், பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனைக்க வந்தடைந்தது.

இப்பேரணியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ம.சிங்காரவேலு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி. வெ.பாக்கியலெட்சுமி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் திருமதி.இரா.இந்திராணி, திருமதி.ஆர்.டி.லதா, திருமதி.எஸ்.ரேவதி. நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்திரன், டாக்டர் சங்கரநாராயணன் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...