Pages

Saturday, August 8, 2015

இறுதி கட்ட பணியில் புதிய டாக்சி ஸ்டாண்ட் !

அதிரை பேரூராட்சியின் பொது நிதி மற்றும் தஞ்சையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கத்தின் 'தொகுதி மேம்பாடு நிதி' ஆகியவற்றிலிருந்து அதிரை பேருந்து நிலைய பகுதியில் வர்த்தக கட்டிடங்கள் மற்றும் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 24 வர்த்தக கடைகள் பொது ஏலத்திற்கு வர இருக்கிறது. இந்த கடைகளிலிருந்து வாடகையாக கிடைக்கும் வருமானத்தை அதிரை பேரூராட்சி பொதுநல பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களாக மும்முரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இதற்கான டெண்டர் விடும் பணியை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக பேருந்து நிலைய மைய பகுதியில் பயன்பாட்டில் இருந்து வரும் வாடகை டாக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் பேரூராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியது.

இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் அதிரைக்கு வருகை தந்த வருவாய்துறை அலுவலர் டாக்ஸி ஸ்டாண்ட் வாகன ஓட்டுனர்களிடம் நேரடி விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிரை பேரூராட்சி சார்பில் டாக்ஸி வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடமாக ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் வடக்கு பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிழமேல் பகுதியை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 9.60 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் மூடியுடன் கூடிய வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் புதிதாக டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதனால் எதிரே வசித்துவரும் முத்தம்மாள் தெருவாசிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த பகுதியில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதை உடனே நிறுத்தக்கோரி கடந்த [ 24-06-2015 ] அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிரை பேரூர் செயலாளர் புருசோத்தமன் தலைமையில் திரண்ட அவரது ஆதரவாளர்கள் ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இது ஒருபுறமிருக்க வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் டாக்ஸி ஸ்டாண்ட் வாகன ஓட்டுனர்களிடம் மீண்டும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக தரைப்பகுதியில் சுக்கான் மணல் பரப்பும் பணி நடந்தது.

வாகனங்கள் நிறுத்துவதற்கு தயார் நிலையில் இடம் அமைந்துள்ளதை அடுத்து இன்னும் சில தினங்களில் அதிரை பேரூந்து நிலையத்தில் நிறுத்தபட்டு இருக்கும் டாக்ஸி வாகனங்களை புதிதாக அமைக்கப்பட்ட இடத்தில் நிறுத்துவதற்கு உரிய முயற்சியில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரை நியூஸுக்காக அஜீம்
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...