Pages

Wednesday, August 26, 2015

வறண்டு கிடக்கும் அதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலரிடம் அதிரை சேர்மன் கோரிக்கை !

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் உத்திரவிற்கிணங்க தஞ்சை மாவட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 13-08-2015 அன்று கல்லணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டப்பட்டது. கல்லணையிலிருந்து டெல்டா சாகுபடிக்காக  தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து கடைமடை பகுதிகளில் தண்ணீர் தவழ்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வறண்டு கிடக்கும் அதிரை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார்.

மனுக்களை பெற்றுக்கொண்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் விரைவில் அதிரை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

கோரிக்கை மனுக்களில் கூறியிருப்பதாவது...
 

3 comments:

  1. மாஷா அல்லாஹு உங்களது பனி சிறக்க வாழ்த்துகள் ...

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹு உங்களது பனி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அல்லாஹு வெற்றி ஆக்கீ தரனும் ஆமீன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...