Pages

Wednesday, August 5, 2015

அவசரம் உடனே ஷேர் செய்யுங்கள் !?

'அவசரம் இதனை உடனே சேர் செய்யுங்கள்' என்ற தலைப்போடு  வாட்ஸ் அப் அல்லது ஃபேஸ்புக் சமூக வலைதளங்களின் பயனர்கள் ஏதேனும் ஒரு தகவலை அனுப்புவர் அவை பெரும்பாலும் வதந்தியாகவே இருக்கும் ஆனால் அது தீயாய் பரவும்.

இவ்வாறு தகவலை பரப்புபவர்கள் எந்த தகவலாக இருந்தாலும் அது உண்மைதானா ? என்பதை  ஊர்ஜீதப்படுத்துவதை அவர்கள் தவறவிட்டு விடுகின்றனர்.

சாதாரண விசயங்களிலிருந்து சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மரணம் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் வரும் தகவல்களில் இது விதிவிலக்கல்ல.

போட்டோ ஷாப் மூலமும் மார்ஃபிங் மூலமும் செட் - அப் செய்யப்பட்ட படங்களை அதன் உண்மை தன்மை அறியாது உடனே பரப்பி விடுவர். போதாதற்கு அதனை உடனே பலர் ஷேர் செய்துவிடுவர்.

தெளிவற்றவர்களோ அல்லது முதிர்ச்சியற்றவர்களோதான் இவ்வாறான தவறை செய்கிறார்கள் என்றால் இல்லை ஓரளவுக்கு விபரம் அறிந்தவர்களும் இதே தவறை செய்வதுதான் வேதனை.

அப்படித்தான் சமீபத்தில் ஒரு தகவல் அதில் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்றும் தொடர்பு கொள்ளவும் என தொலைபேசி எண் முதற்கொண்டு கொடுக்கப்பட்டது. உடனே தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் அந்த எண் முடக்கப்பட்டுள்ளது. விசாரித்ததில்,  ரத்தம் தேவை என்று கேட்கப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அது கடந்த வருடம் என்றும் கூறி, போன் தொல்லை தாங்காமல் அந்த எண்ணையே அதற்குரியவர் உபயோகப்படுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது..

இது ஒன்றும் ஒருமுறையல்ல ஒருவருக்கு ஏற்பட்டதல்ல. பலருக்கு பலமுறை ஏற்பட்டுள்ளது.  மருத்துவ உதவி, கல்வி உதவி, ஹஜ் செய்ய பண உதவி போன்ற அத்தியாவசிய உதவிகள் குறிப்பிட்ட தேவையுள்ள நபருக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுவதும், இதில் நன்மை உண்டு என கருதுவதிலும் தவறில்லை. ஆனால் இதுபோன்ற பகிர்வுகளை பலர் வீணில் தீர ஆராயாமல் பகிருவதால் ஏற்படும் விளைவுகளை பலர் அறிவதில்லை.

அதுமட்டுமா ? ஏதோ ஒரு இந்திப் படத்தில் வந்த ஏதேனும் காட்சிகளை அதன் வாய்ஸ் மாற்றி எடிட் செய்து அது ஒரு உண்மை சம்பவமாக வீடியோவாக பகிர்வதையும் இப்போது தொடங்கிவிட்டனர்.

எனவே எந்த ஒரு தகவலையும் பகிர்வதற்கு முன் அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.  உதவி வேண்டி தொலைபேசி எண், முகவரி உள்ளிட்டவைகள்  கொடுக்கப்பட்டாலும் அந்த தகவலை பகிர விரும்புபவர் குறிபிட்ட முகவரியை அல்லது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அது உண்மைதானா? என்பதை அறிந்து பிறருக்கு பகிர்வதை நடைமுறைப் படுத்தினார்ல் வீண் வதந்திகளுக்கு இடமளிக்காமல் போகலாம்.

"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்" என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

- இப்னு ஹசன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...