Pages

Saturday, August 1, 2015

முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி !

அதிரை அருகே உள்ள சுப்பம்மாள்சத்திரம் கிராமத்தில் ஈசிஆர் சாலையோரத்தில் புதிதாக கட்டப்பட்ட முஹைதீன் ஜும்மா பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று [ 31-07-2015 ] வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் கே. முஹம்மது ஹனீபா தலைமை வகித்தார். ஜும்மா பேருரையை அதிரை அப்துல் லத்திப் ஆலிம் வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட எஸ்.பி பட்டினம் அல் அன்வாருல் குத்ஸிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் கே. ஏ அப்துல் கைய்யூம் ஆலிம், சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் எம். முஹம்மது அபுதாகிர் பாகவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னதாக பள்ளி இமாம் அப்துல் ரஹீம் வரவேற்புரை நிகழ்த்தினார். விழா முடிவில் ஜமாத் பொருளாளர் குத்புதீன் நன்றி கூறினார்.

ஜும்மா பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிரையர்கள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக கமிட்டியினர் செய்துருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...