Pages

Tuesday, August 25, 2015

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்: டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

ஈராக் நாட்டின் அமெரிக்க கூட்டுப் படையின் யுத்தம் 2003 மார்ச் மாதத்திலிருந்து 2003 மே மாதம் வரை  நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டுப் படையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலந்து போன்ற நாடுகள் பங்கேற்றன. அதன் பின்பு ஈராக்கினை சீறாக்குகின்றோம் என்ற நடவடிக்கையில் 36 நட்பு நாடுகள் பங்கேற்றன.

ஈராக் யுத்தத்திற்கு முக்கிய காரண, காரிய கர்த்தாக்கள் அமெரிக்காவின் குடியரசு கட்சியின் ஜனாதிபதி ஜார்ஜ் புஸ்சும், இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி பிரதமர் டோனி பிளேயர் ஆவர்.

அவர்கள் இருவரும் ஐ.நா. உத்திரவினையும் மீறி, தன்னிச்சையாக போர் தொடங்கும் முன்பு அவர்கள் ஏன் போர் தொடுக்குகின்றோம் என்ற கீழ்கண்ட காரணங்களைச் சொன்னார்கள்:
1) ஈராக் உயிர் கொல்லி ஆயுதங்களை கைப்பற்றி, அணு ஆயுதங்கள் ஒசாமா பின் லேடன், 'அழகடா' இயக்கத்தின் கைகளில் சிக்காமல் செய்யவும்.

2) தீவிரவாதத்திற்கு அதிபர் சதாம் ஹுசைன் ஆதரவினை முறியடிக்கவும்,

3) ஈராக் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவும், எடுக்கப்படுகிற நடவடிக்கையே! என்றும் நொண்டிச் சாக்கினை கூறினார்கள்.

ஆனால் ஐரோப்பாவின் நேட்டோ கூட்டுப் படையின் கமாண்டரும், மற்றும் அமெரிக்க கூட்டுப் படையின் கூடுதல் கமாண்டர் ஜெனரலான வெஸ்லி கிளார்க் எழுதியிருக்கும் புத்தகமான, 'வின்னிங் மாடர்ன் வார்ஸ்' ( நவீன யுத்தங்களில் வெற்றியடைவது ) என்பதில் முதலில் ஈராக் அதன் பின்னர் சிரியா,லெபனான், லிபியா,ஈரான், சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளை படிப்படியாக ஐந்து ஆண்டுகளில் கைப்பற்றுவது தான் நோக்கம் என்று கூறியிருக்கின்றார். போர் தொடங்குவதிற்கு முன்னர் அமெரிக்காவில் சி பி எஸ் நிறுவனம் ஒரு சர்வே நடத்தியது. அதில்  64 சத வீத மக்கள் ஈராக் மீத தொடுக்க ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் 63 சதவீத மக்கள் ஈராக்கின் மீது போர் தொடுக்குமுன் பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்றனர். ஏனன்றால் ஈராக் யுத்தம்  ஈராக் மக்கள் மீது மேலும் தீவிரவாதத்தினைப் புகுத்தும் என்றார்கள். அமெரிக்காவின் நெருங்கிய தோழமை நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, நீயுசிலாந்து போன்ற நாடுகள் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் யுத்தம் தொடங்குவதிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிருந்து போருக்கு எதிரான கோசங்கள், ஆர்பாட்டங்கள் கிளம்பின. அந்த ஆர்ப்பட்டங்களுக்கெல்லாம் மணிமகுடமாக ரோம் நகரில் 30 லட்சம் மக்கள் நடத்திய பேரணி கின்னஸ் வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடித்தது  என்றால் பாருங்களேன். ஆனால் அவையெல்லாம் புஸ்சுக்கும், டோனி பிளேயருக்கும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது. அவர்கள் என்ன சொல்ல நான்கேட்க, போர் தொடுத்தே ஆவேன் என்று தனது தோழன் டோனி பிளேயருடன் சேர்ந்து ஈராக்கில் போர் தொடுத்தார்.

சகோதரர்களே, மேலை நாடுகளின் யுத்த தந்திரங்கள் எதற்கு உதவுகின்றன என்றால் பொருளாதார ஆதாயம் பெற முடியும் என்பதால் தான். அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அவை பின் வருமாறு:
1) உலகம் அமைதியாக இருக்குமேயானால் ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூட வேண்டியிருக்கும். யுத்தங்கள் நடந்தால் துப்பாக்கிகள், குண்டுகள், ஏவுகணைகள், டாங்கிகள், பீரங்கிகள், யுத்த விமானங்கள், கப்பல்கள் ஆகியவை தயாரிக்கவும், பழைய ஆயுதங்களைப் புதுப்பிக்கவும் உதவி செய்யும்.

2) எண்ணெய் வளங்களிருந்து, விலை மதிக்க முடியா செல்வங்களை அபகரிக்க முடியும்.

3) பொம்மை ஆட்சியாளர்களை தங்களுக்கு ஆதரவாக நியமிக்க முடியும்
இதனையே தான் யூதர்கள் பழங்கால புத்தகமான, செர்கி நிலஸ், ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து தமிழிலில்  'யூத பயங்கர வாதிகளின் அரசியல் இரகசிய அறிக்கையும்'   மொழி பெயர்த்த ஆரூர் சலீம் புத்தகமும்  சொல்கிறது.

ஈராக் யுத்தத்திற்குப் பின்பு நடந்தது என்னென்ன நடந்தது என்று தூதரக அதிகாரி 'பீட்டர் டபிள்யு கால்ப்ரைத்' கீழ்காண்டவாறு கூறுகின்றார்:
1) புலி வருது, புலி வருது என்று உயிர்கொல்லி ஆயுதம் இருக்கின்றது என்று பொய்யான கூக்கிரல் போட்டு, பூச்சாண்டிக்  காட்டி, சதாம் ஹுசைனை பதவியினை விட்டு இறக்கியதோடு மட்டுமல்லாது, அவரை தூக்கு மேடைக்கும் ஏற்ற வழி விட்டதும், ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கவும் வழி வகுத்தது.

2) தீவிரவாத ஒழிப்புக் கோசம் பல தீவிரவாத கும்பல் கிளம்பி நாள் தோறும் ஒரு குண்டு வெடிப்பு மூலம் ஈராக் சின்னா பின்னமானது.

3) இஸ்ரேயிலுக்கு பாதுகாப்பு நடவடிக்கை என்ற கோசம் போய் நாள் தோறும் இஸ்ரேயலுக்கு ஈரான், சிரியா, ஹோஸ்புல்லா சியா இயக்கங்களிருந்து பயமுறுத்தல் வந்து கொண்டே இருக்கின்றது.

4) அமெரிக்க ராணுவ பலத்தினை நிரூபிக்க தொடுக்கப்பட்ட யுத்தம், அமெரிக்க ராணுவத்திற்கும், நிர்வாகத்திற்கும் பின்னடைவு ஏற்பட்டது.

5) குர்திஸ் இனத்தினர் தனி நாடு ஆதரவு அமெரிக்கா தெரிவித்ததால் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கியின் பகையினை சம்பாதிக்க நேர்ந்தது.
ஈராக் யுத்தமானது 36,000 அமெரிக்க கூட்டுப் படை உயிர்களையும், 500000 ஈராக் மக்கள் உயிரையும் பலி கொண்டது. ஜார்ஜ் புஸ் அமெரிக்க போர் தொடுத்து 10 ஆண்டு நினைவு நாளில், "ஈராக் போருக்கு மன்னிப்புக் கேட்பதாக" ஒரு செய்தியினை அமெரிக்க பத்திரிக்கையின் பேஸ் புத்தகத்தில் வெளி யிட்டதினை பார்த்து உலகமே அது உண்மையா என்று கேள்வி கேட்டது. ஆனால் அந்த செய்தி ஒரு ஏப்ரல் பூல் செய்தி என்று பின்பு தெரிய வந்தது. உண்மையில் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது தான் ஈராக் போருக்கு வருந்த வில்லை என்று சொல்லியிருக்கின்றார். அதே போலதான் டோனி பிளேயரும் தான் போருக்காக வருந்த வில்லை என்றார்.

போருக்குப் பின்னால் நடந்த அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தேர்தலில் ஜார்ஜ் புஸ் குடியரசு கட்சியும், டோனி பிளேயர் லேபர் கட்சியும் தோற்றது இறைவன் கொடுத்த தண்டனையாகும் என்றால் மிகையாகாது.தற்போது இங்கிலாந்து லேபர் கட்சி தலைவர் பதிவிற்கு தேர்தல் நடக்கின்றது. அதில் போட்டிபோடும் 'கார்பின்' என்பவர் தன்னை தலைவராக தேர்ந்தெடுத்தால் முதல் வேலையாக ஈராக் யுத்தத்திற்கு இங்கிலாந்து துணை போனதிற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பேன் என்று அறை கூவல் விட்டுள்ளார். அதற்கான காரணத்தினையும் சொல்லும்போது, 'ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் மீது மக்கள் உயிர்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக பொய்யான குற்றச் சாட்டைக் கூறி போர் தொடுத்து ஈராக் மக்களுக்க எண்ணற்ற துன்பம் விளைவித்ததற்காக தான் மன்னிப்புக் கேட்பேன்' என்கிறார்.

அவருக்குள்ள குற்ற உணர்வு, நியாயமற்ற ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்க மற்றும் அதனுடன் போர் தொடுத்த அல்லது அதற்கு துணை போன நாடுகளின் தலைவர்களுக்கு வந்தால் 'கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம் 'போன்ற மன ஆறுதல் செயலாக இருக்கலாம். அதே போன்று தான் குஜராத் இனக் கலவரத்தில் 2000 பேருக்கு மேல் கொல்லப்  பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லுவது போல பகிரங்க மன்னிப்புக் கேட்டால் ‘கல்லிலும் ஈரமுள்ள நெஞ்சு' என்று சொல்லலாம். இல்லையென்றால் ஈரமே இல்லாத வெறும் கட்டாந்தரை என்று தான் பெயரிட  வேண்டும்.

அல்குரான் அத்தியாயம் 9 அத் தவ்பா வில், 'இறைவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறிவான்  என்று கூறப் பட்டுள்ளது. ஆகவே நீங்கள் 'பூனை கண்ணை மூடிக் கொண்டு திருட்டுத் தனமாக பாலைக் குடித்தால்' வீட்டு சொந்தக்காரருக்கு தெரியாமல் இருக்கப் போவதில்லை. அதே போன்று தான் குற்றங்கள் செய்வது மனித இயல்பு. உங்கள் குற்றங்களை அல்லாஹ் நன்கறிவான். உங்களின் குற்றங்களால் பாதிக்கப் பட்ட மக்களிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்பதினால் உங்கள் மணிமகுடம் தரையில் விழுந்து விடுவதில்லை. அதனால் பாதிக்கப் பட்ட மக்களின் புண் ஆறிவிடாது. மாறாக வெந்த புண்ணிற்கு சற்று  தைலம் தடவிய இதமாகவாவது  இருக்குமல்லவா?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

7 comments:

  1. வெந்த புண்ணுக்கு தைலம் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இருப்பினும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் இனிமேலும் எக்காரணத்தினாலும் நடக்கவிடமாட்டோம் என்று உறுதிகூறினால் ஆறுதலே. எப்படியோ அவர்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் உயிரையும் தான் !

    ReplyDelete
  2. ஈராக்கின் அமெரிக்க ‌‌போர் நடந்த காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், அபு காரியாப் சிறைச்சாலையில் போர் கைதிகளை சித்ரவதை செய்தது. நடந்து முடிந்த ‌பொதுத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் , அரசியல்வாதிகளை கைப்பாவையாக நடத்தியது , போரின் அப்பாவி மக்கள் பலியானதை குறைந்து எண்ணிக்கையினை அறிவித்தது என ஒவ்வொன்றாக நடந்த சம்பவங்களை விளக்கி ஆவணங்களை வெளியிட விக்கிலீக் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின , ஆனால் அதனை பென்டகன் 120 பேர் கொண்ட குழுவினை அதிரடியாக நியமித்து முறியடித்து விட்டது என்னதான் அமெரிக்கா தான் செய்த கொடுஞ்செயல்கள் அனைத்தையும் மறைத்தாலும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அமெரிக்காவுக்கு ஒரு நாள் புரியும். அப்பாவி மக்களை கொன்ற இந்த அமெரிக்கா ஒரு நாள் பெருஅழிவை சந்திப்பது நிச்சயம். தொடர்ந்து எழுதுங்கள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தாங்களின் இக்கூற்று முற்றிலும் உண்மையே.! தூங்குபவரை எழுப்பிவிடலாம் தூங்குவது போல நடிப்பவரை எழுப்பமுடியாது. அதுபோல குற்றம் செய்தவர்கள் தன் குற்றத்தை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக மாற்றி யோசித்து அதை நியாயப்படுத்தவே முயற்சிப்பார்கள்.

    தாங்களின் இத்தகைய ஆக்கம் இத்தகையோர் மனதை சென்றடைந்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தி சிறப்பாக இருக்கும்.
    வாழ்த்துக்கள். இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்

    எண்ணுடைய கட்டுரையினை பிரசுரித்ததிற்கு மிக்க நன்றி !
    சகோதரர்கள் நபிதாஸ் , சரிப் , மெய்சா , கனி ஆகியோர் தெரிவித்த ஆக்கப் பூர்வமான கருத்துக்கள் மேலும் ezhudha ookkam kodukkum.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்

    எண்ணுடைய கட்டுரையினை பிரசுரித்ததிற்கு மிக்க நன்றி !
    சகோதரர்கள் நபிதாஸ் , சரிப் , மெய்சா , கனி ஆகியோர் தெரிவித்த ஆக்கப் பூர்வமான கருத்துக்கள் மேலும் ezhudha ookkam kodukkum.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...