Pages

Monday, August 10, 2015

'டாக்சி ஸ்டாண்ட் பிரச்சனையில் அரசியல் வேண்டாம்': சேர்மன் வேண்டுகோள் [ காணொளி ]

அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் அமைந்துள்ள முத்தம்மாள் தெரு குடியிருப்பின் எதிரே புதிதாக டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதனால் முத்தம்மாள் தெரு குடியிருப்புவாசிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டசியார், அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஆகியோரை கண்டித்து இன்று காலை முத்தாம்மாள் தெரு குடியிருப்புவாசிகள் அதிரை ஈசிஆர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் முத்தம்மாள் தெரு குடியிருப்புதாரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நேற்று செல்லியம்மன் சமுதாய கூடத்தில் கைது செய்து தங்க வைக்கப்பட்டு இருந்த முத்தம்மாள் தெருவாசிகளை சந்தித்தனர்.

இது தொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் காணொளி பதிவு மூலம் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதில் 'டாக்சி ஸ்டாண்ட் பிரச்சனையில் அரசியல் வேண்டாம்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பதவியே பாதுகாதுக்கொள்வதர்க்காக முதலமைச்சர், MP, MLA, பெரிய அரசியல்வாதி இவர்களை நேரில் பார்த்தவுடன் ஜால்ரா அடிப்பது, காலில் விழுவது, சொன்னதுக்கெல்லாம் தலையே ஆட்டுவது இதை எல்லாம் ஒருவன் செய்தால் அவன்தான் நல்ல அரசியல்வாதி, அரசியல் தெரிந்தவன். மக்கள் நலனை கொண்டு அவர்களை எதிர்த்தால், மக்கள் நலனுக்காக, ஊர் முன்னேற்றதிற்கு பாடுப்பட்டால் நிதானம் இல்லாத, பக்குவப்படாத அரசியால்வாதி என்று கூறுகிறார்கள். பேருந்து நிலையத்தில் taxi stand செயல்ப்பட்டுக்கொண்டு இருப்பதால் பொது மக்களுக்கு இடையுறாக இருக்கிறது. பேருந்து நிலையம் பேருந்து நிலையமாக செயல்படவிடுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...