Pages

Saturday, August 15, 2015

அதிரை பேரூர் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய சுதந்திர தின விழா !

இந்தியாவின் 69 வது சுதந்திர தின விழா இன்று [ 15-08-2015 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அதிரை பேரூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதிரை மெயின் ரோடு M.M.S வணிக வளாகத்தின் கார்னரில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக்கொடியை அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

தமாகாவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் M.M.S பஷீர் அஹமது. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தமாகா இளைஞர் அணி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அதிரை கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான தமாகாவினர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதையடுத்து அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு பேரணியாக சென்று அங்கே அமைந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் கொடியேற்றும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

1 comment:

  1. அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...