Pages

Wednesday, August 12, 2015

தஞ்சையில் ஜிகே வாசன் நடத்திய கையெழுத்து இயக்கம் !

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி நேற்று  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முதல் நபராக மதுவிலக்கு கோரி கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்ட தமாகா சார்பில் கையெழுத்து இயக்கம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ் மூப்பனார், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ, மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆர். நடராஜன் ஆகியோர் முன்னிலையில் திரண்ட தமாகாவினர் பொது மக்களிடமும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கையெழுத்து வாங்கினார்கள். இதில் ஏராளமான தமாகாவினர் கலந்துகொண்டனர்.

அதிரையிலிருந்து தமாகா மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலு, தஞ்சை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி கார்த்திகேயன், அதிரை பேரூர் நிர்வாகிகள் வீரப்பன், ராஜா, ராஜேந்திரன், குணசேகரன், சசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...