Pages

Saturday, August 15, 2015

அதிரை சிறுவன் ஆங்கிலப் பாடத்தில் சாதனை !

அதிரையை சேர்ந்தவர் அப்துல் ஜலீல். துபாயில் பணியாற்றி வருகிறார். கீழத்தெரு அமீரக மஹல்லா தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகன் ஜமால் முஹம்மது. அதிரை அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளியில் முதலாம் வகுப்பு பயின்று வருகிறார்.

படிப்பில் சுட்டியான இந்த சிறுவன் ஆங்கில பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார். இன்று காலை பள்ளி சார்பில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் சிறுவனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிறுவனின் தகப்பனார் அமீரகத்தில் கடந்த 32 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இவரது நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் இவரது சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...