Pages

Monday, August 3, 2015

தஞ்சை பகுதிகளில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திறப்பு !

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.  மேலும் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் தாய்பால் வங்கியினையும் திறந்து வைத்தார்கள்.

உலக தாய்பால் வாரத்தை முன்னிட்டு பணிபுரியும் மகளிர் தாய்பால் ஊட்டுவதில் உள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு அதில் உள்ள இடர்பாடுகளை களைவதன் மூலம் அவர்கள் தாய்பால் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  

பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. பேருந்திருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் அன்னையர் தங்களது குழந்தைகளுக்கு எவ்வித இடைய10றுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் தஞ்சாவ10ர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் தனி அறை அமைக்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கை கழுவும் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.

குழந்தை பிறந்தவுடன் சில தாய்மார்களுக்கு முற்றிலுமோ அல்லது போதுமான அளவுக்கோ தாய்ப்பால் கிடைப்பதில்லை.  எடை குறைந்த குழந்தைகளையும், குறைமாதக் குழந்தைகளையும் காப்பாற்ற தாய்ப்பால் மிக அவசியம்.  நோய் வாய்ப்பட்ட குழந்தை, தீவிர சிகிச்சையில் உள்ள தாயின் குழந்தை, தாய்ப்பால் சுரப்பு குறைந்த அல்லது இல்லாத தாயின் குழந்தை, தத்து எடுக்கப்பட்ட குழந்தை, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட குழந்தை, மகப்பேறு மரணம் அடைந்த தாயின் குழந்தை ஆகிய குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மிகவும் அவசியம்.  

தாய்ப்பால் வங்கி 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சேமித்து வைத்து பயன்படுத்த தேவையான உறைநிலை குளிர்பதனக் கருவி, கிருமி நீக்கும் கருவி, தாய்ப்பால் எடுக்கும் கருவி, குளிர் சாதனப் பெட்டி போன்ற அனைத்து நவீன கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. தாய்மார்கள் தாங்களாகவே முன் வந்து தானமாக கொடுக்கும் தாய்ப்பாலை பதப்படுத்தி மூன்று மாதங்கள் வரை தாய்ப்பால் வங்கிகளில் சேமித்து, தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வழங்க முடியும்.  இதன் மூலம் பச்சிளங்குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, குழந்தைகளின் சிசு இறப்பினை தவிர்க்க முடியும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு  முதல்வர் அவர்கள் தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் தாய்பால் வங்கியினை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் காணொளி காட்சி திறந்து வைத்தையடுத்து தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் திரு.எம்.ரெங்கசாமி, மாண்புமிகு மாநகர  மேயர் திருமதி.சாவித்திரிகோபால், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.துரை.திருஞானம், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் திரு.ஆர்.காந்தி, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சிங்காரவேலு, சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, மொத்த கூட்டுறவு பண்டக சாலை திரு.வி.பண்டரிநாதன், நிக்சல்சன் வங்கி தலைவர் திரு.அறிவுடைநம்பி, துணைத்தலைவர் திரு.புண்ணியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜெ.ஏ.செந்தில்வேலன், ஆணையர் திரு.த.குமார், மாநகர பொறியாளர் திரு.சீனிவாசன்,  மாநகர் நல அலுவலர் டாக்டர் செந்தில், மாமன்ற உறுப்பினர்கள், ஏராளமான தாய்மார்கள் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...