Pages

Saturday, August 8, 2015

அதிரையில் திமுக நடத்திய தெருமுனை பிராச்சாரக் கூட்டம் !

திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதிமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் விதத்தில் தெருமுனை பிராச்சாரக் கூட்டம் இன்று இரவு அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஏனாதி பா. ராமநாதன் தலைமை வகித்தார். திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், திமுக முன்னோடி பழஞ்சூர் கே. செல்வம், அவைத்தலைவர் அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதி சுப்பு மாறன், இன்பநாதன், அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி, ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, சி.வீரப்பன், துணை செயலாளர் தில்லை நாதன், மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜி. மருதையன், அதிரை பேரூர் வார்டு கவுன்சிலர்கள் அய்யாவு, பாஞ்சாலன், உம்மல் மர்ஜான் அன்சர்கான், என்.எம் செய்யது, என்கேஎஸ் முஹம்மது செரிப், சித்ரா, முஹம்மது இப்ராஹீம் மற்றும் அதிரை பேரூர் வார்டு செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் ஆடுதுறை மு.உத்திராபதி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.  கூட்ட முடிவில் திமுக அதிரை பேரூர் துணை செயலாளர் அன்சர்கான் நன்றி கூறினார். இதில் பட்டுக்கோட்டை ஒன்றியம் மற்றும் அதிரை பேரூர் திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...