Pages

Sunday, August 9, 2015

அமெரிக்கா அதிரை கூட்டமைப்பும், அதன் முக்கியத்துவமும்...

அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு வாழும் அதிரை முஸ்லிம் மக்கள் அனைவரும் எவ்வித தெரு வேறுபாடும் இல்லாமல், எந்த சங்கத்துக்கும் கொடி பிடிக்காமல், ஒன்றுபட்ட ஒரே அமைப்பாக இருக்கிறார்கள். எந்த ஒரு தெருவுக்கும் இங்கு அமைப்புக்கள் இல்லை. அனைவரும் அமெரிக்கன் அதிரை ஃபோர்ம் என்ற அமைப்பின் கீழ் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர். இது வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒரு அறிய நிகழ்வாகும்.

வளைகுடா நாடுகளில் உள்ள எந்த நாட்டையும் எடுத்துப் பார்ப்போம் என்றால், அங்கெல்லாம்,முஹல்லாகள் முஹல்லாக்களாக பிளவு பட்டு, தெருவுக்கு ஒரு சங்கமாக பிரிந்துகிடக்கிறார்கள். ஆஸ்திரேலிய, பிரிட்டன் போன்ற நாடுகளின் கதியும் இதுதான்.

குறிப்பிட்ட இந்த தெருவாசிகளின் கூட்டம் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட அந்த தெருவாசிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று விளம்பரங்கள் வருகின்றன.

ஆனால், அமெரிக்காவின் நிலையே வேறு, இங்கு அதிரைவாசிகளே கலந்து கொள்ளுங்கள் என்றுதான் விளம்பரங்கள் வரும்.

அதையே, கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்ட சவூதி அய்டாவின் முன்னாள் தலைவர் ஆபிதீன் காக்கா அவர்கள், இதை ஒரு யுனிக் என்று குறிப்பிட்டு பாராட்டினார்கள்.

இன்ஷா அல்லாஹ், இது இனியும் தொடர வேண்டும் என்பதே நம் அவாவும், துவாவும்.

அமெரிக்காவிலிருந்து இப்னு அப்துல் ரெஜாக் ( அர அல )

4 comments:

  1. மாஷா அல்லாஹு வலா ஹவ்ல வளாகுவத்த இல்லா பில்லாஹ்

    ReplyDelete
  2. அமெரிக்கா வாழ் அதிரை மக்கள் கூட்டமைப்பிற்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அமெரிக்காவில் அதிரை வாசிகள் குறைந்தது 100 பேருதான் இருப்பார்கள் ஆனால் அமீரகத்தில் 2000 மேற்பட்ட அதிரை வாசிகள் இருக்கிறார்கள் அதனால் தான் அமீரகத்தில் முஹல்லா வாரியாக கூட்டம் நடைபெறுகிறது

    ReplyDelete


  4. நமது ஊர் நலனுக்காக அதிரையில் அனைத்து முஹல்லா அமைவதற்கு காரணமாக இருந்தவர்கள் அமீரகத்தில் இருக்கும் அதிரை வாசிகள்தான்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...