Pages

Sunday, August 2, 2015

அதிரையில் ரெட் கிராஸ் நடத்தும் மாபெரும் இரத்த தானம் முகாம் !

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டி மற்றும் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தானம் முகாம் எதிர்வரும் [ 06-08-2015 ] அன்று காலை 9 மணி முதல் அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய அமைப்புகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு குருதிக்கொடையை வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் மற்றும் இரத்த தானம் செய்ய விரும்புவோர்
அதிரை ரெட் கிராஸ் சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அவர்களை 9043140142 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டி சார்பில் இரத்த தானம் முகாம் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஃப்ளக்ஸ் பேனர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது...


1 comment:

  1. நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ வகை தானங்கள் செய்திருப்போம். அவையெல்லாம் அடுத்தவரின் மனக்காலையையோ, பசியையோ போக்கும். ஆனால் நாம் கொடுக்கும் ரத்ததானம் ஒருவரின் உயிரைக் காக்கும். ரத்த தானத்தை சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுத்தோம் என்றால், அதைவிட பெரிய தானம் இவ்வுலகில் இல்லை என்பதே என் கருத்து.

    அதற்காக முயற்சி மேற்கொள்ளும் ரெட்கிராஸ் அமைப்பினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் துஆவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...