Pages

Monday, August 10, 2015

'என்னை கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்'- முஸ்லீம் இளைஞரின் சமூக விழிப்புணர்வு! (வீடியோ)

மும்பை: கண்களை கட்டிய முஸ்லீம் இளைஞர் ஒருவர் சாலையோரத்தில் நின்று கொண்டு, "என்னை கடந்து செல்பவர்கள் என்னை கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய சமூக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மாசிம் மில்லா என்ற அந்த இளைஞர், மும்பையின் சவுபாட்டி பகுதியில் தனது கைகளை விரித்தபடி, கண்களை கட்டிய நிலையில் ஒரு அட்டையுடன் நின்று கொண்டு இருந்தார். அந்த அட்டையில், "நான் ஒரு முஸ்லீம். நான் உங்களை நம்புகிறேன், நீங்களும் என்னை நம்புகிறீர்கள் என்றால் என்னை நீங்கள் கட்டிப்பிடிப்பதே அதற்கு போதுமானது” என எழுதி வைத்து இருந்தார்.

இதை பார்த்து முதலில் கூட்டம் கூடியது. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு முதலில் தயக்கம் இருந்தது. சிறிது நேரத்தில் வந்த ஒருவர், முன்னால் வந்து மில்லாவை கட்டி அணைத்தார். அதைத் தொடர்ந்து அனைவரும் முன்வந்து, மில்லாவை கட்டி அணைத்து கை குலுக்கினர்.

சமூக விழிப்புணர்வுக்காக யுடியூப் சேனலால் இது நடத்தப்பட்டது.

நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...