Pages

Sunday, August 9, 2015

காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் மெய் சிலிர்க்க வைத்த சந்திப்பு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1996 - 1999 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடப் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் நெஞ்சம் நெகிழும் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று 08-08-2015 அன்று காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் உதுமான் முகைதீன் தலைமையுரை நிகழ்த்தினார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் சேக் அப்துல் காதர், ஆங்கில துறை தலைவர் முஹம்மது முகைதீன், இணை பேராசிரியர் எம் சிக்கந்தர் பாஷா, முனைவர் எஸ்.அபூதாஹிர், முனைவர் ஓ சாதிக், எஸ். சந்தானம், அலுவலக கண்காணிப்பாளர் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களை பற்றி அறிமுகத்தையும், தற்போது தான் செய்துவரும் பணிகள் பற்றியும், கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகள் ஆகியவற்றை பேசி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.

முன்னதாக முன்னாள் மாணவர் சேனா மூனா ஹாஜா முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்சிகள் அனைத்தையும் உதவி பேராசிரியர் ஹாஜா அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சி முடிவில் முன்னாள் மாணவர் தவாரிஸ் அன்சாரி நன்றி கூறினார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்டனர். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியை இனி வருடந்தோறும் இதே தினத்தில் ( 08th August ) முன்னாள் IT மாணவர்கள் இணைந்து நடத்த வேண்டும் என்பதே முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் ஒருமித்த கருத்தாகவும், விருப்பமாகவும் இருந்தது.




2 comments:

  1. வாவ்.... ஸ்வீட் ட்ரீம்ஸ்...!!

    ReplyDelete
  2. படிப்பிற்கு பின், 17 ஆண்டுகளில் சாதித்தவை, சாதிக்க முயல்பவி, வெற்றிகள், தோல்விகள் பற்றி பகிர்ந்து இருந்தால் உபயோகமாக இருந்திருக்குமே .....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...