Pages

Tuesday, August 11, 2015

அதிரையில் கல்லூரி மாணவர்கள் மதுவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் !

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், மதுவிலக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்த கல்லூரி மாணவர்களை தாக்கியதை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக்கோரியும் அதிரையில் தனியார் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்ட மாணவர்கள் கல்லூரி அருகிலிருந்து கண்டன கோஷங்கள் இட்டவாறு பேரணியாக புறப்பட்டு சென்றனர். பேரணி ஈசிஆர் சாலை கல்லூரி முக்கம் அருகில் சென்றபோது, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி பிச்சை தலைமையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீசார்கள் தடுத்து நிறுத்தினார்கள், பின்னர் மாணவர்களை கலைந்துபோக அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து கண்டன கோசங்கள் இட்ட மாணவர்கள் சிறிது நேரத்தில் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தால் ஈசிஆர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 
 
 
 
 
 

3 comments:

 1. மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: –

  “(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

  மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

  ReplyDelete
 2. மது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். மதுவால் எவ்வளவு சீரழிவு என்பதை யாவரும் அறிவர் மேலும் கல்லூரி மாணவர்கள் சமூக பொறுப்புடன் நடப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இருப்பினும் அரசை எதிர்த்து சண்டை போடுவதால் என்ன லாபம் உங்களுக்கு? ஒருநாள் விடுமுறை கிடைக்கும் அதானே!. முதலில் உங்கள் நண்பர்களை திருந்தசொல்லுங்கள். இன்று குடிப்பது தவறு என்ற எண்ணம் பெரும்பாலும் குடிப்பவர்கள் யாரிடமும் இல்லை. இது ஒரு மனித இயல்பாக மாறும் நிலை உள்ளது. இதற்காக போராட வேண்டுமானால் மதுவை தயாரிப்பவர்களை எதிர்த்தும் ஏன் இதை ஒரு கலையாக, இயல்பாக சித்தரிக்கும் திரைத்துறையையும் கூட எதிர்த்து போராட வேண்டும். அதை விடுத்து உங்களது நண்பர்களுக்கு இது தவறென்று புரிய வையுங்கள். திருத்த முயலுங்கள். குடிப்பதை நீங்கள் நிறுத்துங்கள், கடையை அவர்கள் மூடுவார்கள்.
  அரசியல்வாதிகள் மட்டும் சமூகத்தை சீரழிக்க வில்லை திரைபடத்துரைனரும் தான்; குடிப்பதை அழகாக சித்தரித்து அதன் கீழே " மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் " என்ற விளம்பரத்தை பார்த்து எத்தனை பேரு மனதை மாற்றிக் கொண்டார்கள்? மதுவை பற்றி பெற்றோர்களே தங்கள் குழந்தைக்கு போதிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள், காரணம் யாரு ..... சிந்தியுங்கள்.

  ReplyDelete
 3. I second the views of Bro. Masthan

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...