Pages

Sunday, August 16, 2015

அதிரையில் திமுக நடத்திய ஆய்வுக்கூட்டம் !

அதிரை பேரூர் திமுகவின் ஆய்வுக்கூட்டம் அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை மேற்கு தொகுதி ஒன்றிய செயலளார் ஏனாதி பா. இராமநாதன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலு, திமுக அதிரை பேரூர் செயலளார் இராம குணசேகரன், அவைத்தலைவர் அப்துல் காதர், பழஞ்சூர் செல்வம், மாவட்ட பிரதிநிதி மீராஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திமுகவின் தலைமை பிரதிநிதியும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதிரை பேரூர் திமுக வார்டு பகுதிகளில் பின்பற்றி வரும் மினிட் புத்தகம் பராமரிப்பு, திமுகவின் நிகழ்ச்சி நோட்டிஸ்கள், வாக்குச்சாவடி முகவர்கள், திமுக ஆக்கப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினார்.

முன்னதாக திமுக அதிரை பேரூர் செயலளார் இராம குணசேகரன் வரவேற்றார். கூட்ட முடிவில் திமுக அதிரை பேரூர் துணை செயலளார் அன்சர்கான் நன்றி கூறினார்.

இந்த ஆய்வில் மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி, ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, அப்துல் ஹலீம், சி.வீரப்பன், துணை செயலாளர் தில்லை நாதன், மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜி. மருதையன், அதிரை பேரூர் வார்டு கவுன்சிலர்கள் அய்யாவு, பாஞ்சாலன், பசூல்கான், உம்மல் மர்ஜான் அன்சர்கான், என்.எம் செய்யது, என்.கே.எஸ் முஹம்மது செரிப், சித்ரா, முஹம்மது இப்ராஹீம் மற்றும் அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் சபீர் அஹமது, நிஜாமுதீன், ஜே.ஜே சாகுல் ஹமீது, இப்ராஹீம், சோமு, பகவதி, முத்துராமன், சைபுதீன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...