Pages

Thursday, August 6, 2015

அதிரையில் ரெட் கிராஸ் நடத்திய இரத்த தானம் முகாமில் பலர் பங்கேற்பு ! [ படங்கள் இணைப்பு ]

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டி மற்றும் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தானம் முகாம் இன்று [ 06-08-2015 ] காலை அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இரத்த தானம் முகாமிற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை
செயலாளர் டாக்டர் திருமதி வசந்தா கோவிந்தராஜன் தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பட்டுக்கோட்டை சேர்மன் திரு. சுவாமிநாதன், செயலாளர் ஆர்.ரவி, அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணைத் தலைவர் எஸ்.ஏ.சி இர்ஃபான் சேக், துணை செயலாளர் அபூ தாஹிர், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, சி. சார்லஸ், எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆயுட்கால உறுப்பினர்கள் 'நிருபர்' ஹசன், சுலைமான், சேக் அப்துல் காதர், சைஃபுதீன், காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், முனைவர் ஓ. சாதிக், பேராசிரியர் பிரேம் நவாஸ், பேராசிரியை சாபிரா பேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சையிலிருந்து வருகை தந்த இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மருத்துவ குழுவினர் இரத்த கொடையாளர்களிடமிருந்து மொத்தம் 66 யூனிட் இரத்தத்தை தானமாக பெற்றனர்.

முன்னதாக தஞ்சை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலர் ராஜகோபால் இரத்த தானம் குறித்து அறிமுக உரையாற்றினார். முகாமை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டி பொருளாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, அதிரை கூட்டுறவு சங்க துணை தலைவர் முஹம்மது தமீம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முகாமில் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்களின் ஏற்பாட்டில் மாணவர் எம். விக்னேஸ்வரன் தலைமையில் 16 பேர், காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஓ. சாதிக் அவர்களின் ஏற்பாட்டில் மாணவர் ஏ. ராஜிக் அஹமது தலைமையில் 10 பேர். இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் அதிரை ராஜா தலைமையில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் இரத்த தானம் செய்தனர்.

இந்த முகாமில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள், காதிர் கல்லூரி நாட்டுநலப்பள்ளி திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு குருதிக்கொடையை வழங்கினார்கள். முகாம் ஏற்பாடுகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

குருதிக்கொடை வழங்கிய அனைவருக்கும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டி சார்பில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கும் விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட உள்ளது.
 
 
 
 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...