அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் அமைந்துள்ள முத்தம்மாள் தெரு குடியிருப்பின் எதிரே புதிதாக டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதனால் முத்தம்மாள் தெரு குடியிருப்புவாசிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டசியார், அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஆகியோரை கண்டித்து இன்று காலை முத்தாம்மாள் தெரு குடியிருப்புவாசிகள் அதிரை ஈசிஆர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் முத்தம்மாள் தெரு குடியிருப்புதாரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். கைது செய்யப்பட்டு செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள முத்தம்மாள் தெரு பொதுமக்களை நேரடியாக சந்தித்து பிரச்சனை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தனர்.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம், தமாகாவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் M.M.S பஷீர் அஹமது. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு உட்பட தமாகவினர் பங்கேற்றனர்.
டாக்ஸி ஓட்டுனர்கள் என்ன ஒதுக்கப்பட்ட சமுதாயமா ??? அல்லது அவர்கள் என்ன சமூக விரோதிகளா ???
ReplyDeleteஅவர்களை ஏன் மக்கள் இப்படி அலைகழிக்க வேண்டும் ???
கார் ஓட்டுனர்களும் நமதூர் காரர்கள் தானே இதுவும் Self employment என்னும் ஒரு சுய தொழில் தானே??? நான் பார்த்த வகையில் கனடா ,அமெரிக்கா, UK போன்ற நாடுகளில் பெரிய பொறியாளர்கள் கூட இந்த தொழிலையே செய்து வருகின்றனர் .
போதுமடா அப்பா அதிரைக்கு வந்தாலும் வந்தது ஒரு ECR ROAD அதிலே ஆணும் பெண்ணும் தினமும் உட்கார்ந்து கொண்டு போராட்டம் போராட்டம் . தீயவைகளுக்கு மட்டும் போராடுங்கள் அதை மக்கள் ஆதரிப்பார்கள்.
This comment has been removed by the author.
Delete//அவர்களை ஏன் மக்கள் இப்படி அலைகழிக்க வேண்டும் ???//
Deleteபொதுமக்கள் அலைகழிக்கறார்களா ? அப்படி என்றால் பொதுமக்களினால் தான் இந்த பிரச்சனை என்று கூறுகிறீர்களா ?
கார் ஒட்டுனர்களும் அதிரை வாசிகள் தான் அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
//போதுமடா அப்பா அதிரைக்கு வந்தாலும் வந்தது ஒரு ECR ROAD அதிலே ஆணும் பெண்ணும் தினமும் உட்கார்ந்து கொண்டு போராட்டம் போராட்டம் . தீயவைகளுக்கு மட்டும் போராடுங்கள் அதை மக்கள் ஆதரிப்பார்கள்.//
தீயவைகள் என்று கூறியுள்ளீர்கள், தீயவற்றுக்கு மட்டும் போரடுங்கள் மக்கள் ஆதரிப்பார்கள்.அப்படி எந்த தீய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தார்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும்.
இதே இசிஆர்ல் தான் கடந்த மதுவுக்கு எதிரான போராட்டம் கடந்த 2013 பிப்ரவரில் நடைபெற்றது மேலும் பல மக்கள் போராட்டம் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
http://theeadirainews.blogspot.com/2013/02/blog-post_8799.html
This comment has been removed by the author.
ReplyDeleteஅரசியல் ஆக்கபடுகிறது இந்த சம்பவம் இதில் சிலர் ஆதாயம் தேட நினைக்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மை, அது போல் டாக்ஸி ஓட்டுணர்களுக்கு உரிய இடம் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத இடம் ஒதுக்கப்பட வேண்டும் இந்த இடம் உகந்தது இல்லை என்பதிலும் மாற்று கருத்துக்கு இடமில்லை சேர்மன் அவர்கள் அவருக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சியை அறிந்து உடனே இதற்க்கான நல்ல முடிவை விரைவில் எடுக்க வேண்டும்..
ReplyDeleteஅன்பு சகோதரர் அகமது முனாஸ் கான் அவர்களுக்கு தீயவைகளுக்கு எதிராக என்பதையே தீயவைகள் என சுர்ரிகாட்டி உள்ளேன் .
ReplyDelete//தீயவைகள் என்று கூறியுள்ளீர்கள், தீயவற்றுக்கு மட்டும் போரடுங்கள் மக்கள் ஆதரிப்பார்கள்.அப்படி எந்த தீய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தார்கள் என்று கூறினால் நன்றாக இருக்கும்.//
//அதிரை நசீர்
எனக்கு நடந்த சம்பவம் விடியற்காலை 2 மணிக்கு வண்டியினை எடுத்து சென்னை ஏர் போட்டுக்கு போனேன்.. திரும்பி ஊருக்கு வந்தது அடுத்த நாள் அதிகாலை 2.30 மணிக்கு இதில் ஒரு நிமிடம் கூட தூங்க முடியவில்லை என்னால்... Driver தொழில் என்றால் அப்படி தான்... நான் வீட்டுக்கு வந்து
தூங்கி விட்டேன் ஒரு அரை மணி நேரம் கழித்து எனது வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டது... என்ன என்று கேட்கும் போது கற்பிணி பெண்ணுக்கு தண்ணீ குடம் உடைந்து விட்டாதாக சொன்னார்கள் உடனே தஞ்சை செல்ல வேண்டும் கூறினார்கள்.. எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை முடியாது என்று சொல்ல எனது தூக்கமும் என்னை விட்டுக் கொடுக்க தயராக இல்லை வேற வழியில்லாமல் சுடு
தண்ணியில் மூஞ்சியினை கழுவி உடனே சென்றேன்.. அந்த தாயினன சேயினை பாதுகாக்க//
மேலும் சகோதரர்களே,
ஊருக்கு மத்தியில் டாக்ஸி நிறுத்தம் அமைக்க வேண்டாம் என்று கூறுவது தவறு.டாக்ஸி இவைகள் ஆம்புலன்ஸ் இல்லாத நேரத்தில் அவசர சிகிச்சைக்கு மக்கள் நாடுவது இந்த டாக்ஸி களை மட்டும் தான் இதற்கு மக்கள் ஆதரவு கொடுங்கள் மேலும் இவர்கள் எல்லை மீறும் போது இவர்கள் மீது கட்டுபாடுகளை விதிக்கலாம் .
டாக்ஸி ஸ்டாண்ட் வைக்கலாமா வேண்டாமா என்ற கருத்து ஒருபக்கம் இருந்தாலும் ஏற்கனெவே ECR ரோடு மரண ரோடு என்று சொல்லுகிறார்கள் ஸ்டாண்ட் அமைந்தால் விபத்தினை தடுக்க கூடுதல் வேகத்தடை அமைக்க வேண்டும், டாக்ஸி ஸ்டாண்டை இரயில் நிலையத்திற்கு அருகில் கொண்டு போய்விடுங்கள் யாருக்கு எந்த தொந்தரவும் இருக்காது.
ReplyDeleteநீங்கள் என்னமுயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடனும் அப்பபறம் பார்க்கலாம் எல்லனிகல் உ களையும் உஊறு மக்கள் பர்துகொன்டுதான் இருக்குக்ரார்கள்
ReplyDeleteபதவியே பாதுகாதுக்கொள்வதர்க்காக முதலமைச்சர், MP, MLA, பெரிய அரசியல்வாதி இவர்களை நேரில் பார்த்தவுடன் ஜால்ரா அடிப்பது, காலில் விழுவது, சொன்னதுக்கெல்லாம் தலையே ஆட்டுவது இதை எல்லாம் ஒருவன் செய்தால் அவன்தான் நல்ல அரசியல்வாதி, அரசியல் தெரிந்தவன். மக்கள் நலனை கொண்டு அவர்களை எதிர்த்தால், மக்கள் நலனுக்காக, ஊர் முன்னேற்றதிற்கு பாடுப்பட்டால் நிதானம் இல்லாத, பக்குவப்படாத அரசியால்வாதி என்று கூறுகிறார்கள். பேருந்து நிலையத்தில் taxi stand செயல்ப்பட்டுக்கொண்டு இருப்பதால் பொது மக்களுக்கு இடையுறாக இருக்கிறது. பேருந்து நிலையம் பேருந்து நிலையமாக செயல்படவிடுங்கள்.
ReplyDelete