Pages

Tuesday, August 11, 2015

காக்கா வீட்டு பேரன் !

சமீப காலங்களில் அண்ணலெம் பெருமானார் முஹம்மத் நபி ( ஸல் ) அவர்களின் தோழர்களின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. உண்மையில் இது மிக மெச்சப்பட வேண்டிய ஒரு செய்தியாகும்.

முதலில் சஹாபாக்கள் என்போர் யார் ? அவர்களின் தியாகங்கள் என்ன ?போன்ற விஷயங்களை ,அவர்களின் உன்னதமான தியாகமான வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் இன்ஷா அல்லாஹ் படிக்க வேண்டும்,இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்க வாய்ப்புண்டு.

நம் குழந்தைகளுக்கு சினிமா நடிகர்,நடிகைகளின் பெயரை வைத்து,அவர்களை,அந்தக் கூத்தாடிகளை நம் குழந்தைகளுக்கும்,நம் சமுதாயத்துக்கும் அறிமுகப்படுத்தி,சேவை செய்யும் சில தாய் தந்தையர் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்கள் திருந்தி,அப்பெயர்களை மாற்றி,தத்தம் குழந்தைகளுக்கு சஹாபாப் பெருமக்கள், இமாம்கள் போன்றோர்களின் பெயர்களை  வைக்க வேண்டும்,தங்கள் குழந்தைகள் கூத்தாடிகளின் பெயர்களை தாங்கிக் கொண்டு திரியாமல்,அந்த அநாகரிக செயல்களுக்கு விளம்பரம் தேடித் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இல்லையெனில், சமுதாயத்தின் ஒழுங்கீனத்துக்கு அவர்கள் மறைமுக வேலை பார்க்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

சஹாபாப் பெருமக்கள்,இமாம்கள் பெயரை வைத்தால்,- அந்தக் குழந்தையின் பெயரை சொன்னாலே,அது அந்த உன்னத சஹாபியின் பெயர் நிழலாடி, அவர்களின் வரலாறு நினைக்க தோன்றும்,அல்லது அன்னவர்களின் வரலாற்றை படிக்கத் தோன்றும்.

என் காக்கா அவர்களுக்கு மகள் வழி பேரன் பிறந்திருக்கிறான். முஆத் என பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தப் பேரனை பார்க்கும் போதும், கொஞ்சும் போதும், இயற்கையாகவே ரலி என்று சேர்த்து சொல்லவே மனம் நாடுகிறது, அத்துடன் அந்த சஹாபியின் வரலாறு நெஞ்சம் நனைக்கிறது, இன்னும் அவர்களின் வரலாறு படிக்கத் தோன்றுகிறது.இதன் மூலம்,அந்த உன்னத சஹாபியின் பெயர் மூலம்,அவர்களின் தியாகம் இன்னும் பரவ வழி ஏற்படுகிறது. இது கூட ஒரு சைகாலஜி போன்ற ஒரு விடயமாகவே நான் கருதுகிறேன்.

ஒரு நடிகனை,நடிகையை ,நம் பிள்ளைகளுக்கு பெயர் இட்டு, அவர்களின் கேவலமான வாழ்கையை விளம்பரப்படுதுவதன் மூலம்,அசிங்கமான செயல்கள் எல்லாம்,அங்கீகாரம் அடைந்து விடுகின்றன. இது சமுதாயத்தில் மறைமுக ஆபத்தை விளைவிக்கும்.

ஆனால்,இப்படி சஹாபாப் பெருமக்கள்,இமாம்களின் பெயர்கள் மூலம் ,அவர்களின் தியாகம், ஒழுக்கம் நினைவு கூறப்பட்டு, சமுதாயம் சீர்படுகிறது.
எனவே, இது விஷயத்தில் நாம் கவனம் செலுத்தி, சஹாபாக்களின் மாண்புதனை இன்னும் உலகம் அறிய செய்வோம், இன்ஷா அல்லாஹ்.

அமெரிக்காவிலிருந்து இப்னு அப்துல் ரெஜாக் ( அர அல )
படத்தில் இடம்பெற்றுள்ள சிறுவன்: முஆத்

1 comment:

  1. நபிகள் எம் பெருமானார் முஹம்மத் நபி ஸல் அவர்கள்,யாராவது ஷிர்க்கான பெயரையோ,தவறான அர்த்தம் கொண்ட பெயரையோ வைத்திருந்தால்,அதை நீக்கி விட்டு,மாற்றி விடுவதாக அவர்களின் தூய வரலாறு மூலம் அறிய முடியும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...