Pages

Saturday, August 8, 2015

'தினமலர்' நடத்திய பொது அறிவு போட்டியில் சாதனை நிகழ்த்திய சேக் அப்துல் காதர் !

'தினமலர்' நாளிதழ் நடத்திய சுதந்திர தின பொது அறிவு வினாடி-வினா போட்டியில் நமதூரை சேர்ந்த காதிர் முகைதீன் கல்லூரியில் பணியாற்றும் சேக் அப்துல் காதர் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்த தேர்வில் 12 கல்லூரிகள், 40 மேல்நிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம் 52 கல்வி நிறுவனங்களை சேர்ந்த 104 போட்டியாளர்கள் தேர்வில் பங்குபெற்றனர். இதில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றும் சேக் அப்துல் காதர் அவர்கள் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இடத்தை தஞ்சை போன்ஸ்கோர்ஸ் மகளிர் கல்லூரியும், இரண்டாம் இடத்தை தஞ்சை யாகப்பா இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளி பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சான்றிதல் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சாதனை நிகழ்த்திய சேக் அப்துல் காதர் அவர்களை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் உதுமான் முகைதீன், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளார்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

6 comments:

  1. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. புன்முறுவல் என்றும்
    பூத்துக் குலுங்கும்
    இன்முகத்தின் வெற்றி
    இதயமகிழ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...