Pages

Wednesday, August 5, 2015

பட்டுக்கோட்டையில் IJM நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பில் மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்த சசி பெறுமாள் அவர்களின் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் அதிரை ராஜா தலைமை வகித்தார். இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் மதுக்கூர் மைதின் கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயளாலர் இளம் தென்றல், ஆதி திராவிடர் நிறுவன தலைவர் சதா சிவக்குமார், திமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மணிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயளாலர் ரோஜா பிரியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதில் இஸ்லாமிய ஜனநாயக முன்னணி கட்சியினர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...