Pages

Friday, August 7, 2015

அதிரை SSMG அணி சாம்பியன் !

இளைஞர் கால்பந்துக் கழகம் 21 ஆம் ஆண்டு, S.S.M குல் முஹம்மது அவர்களின் நினைவு 15 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று [ 07-08-2015 ] மாலை நமதூர் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இதில் தஞ்சை அணியினரும், அதிரை SSMG அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் அதிரை SSMG அணியினர் இந்த தொடர் போட்டியின் சாம்பியன் பட்டதை தட்டிச்சென்றனர்.

முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆர்எஸ்ஆர்சி முன்னாள் விளையாட்டு வீரர் ஜமால் ஹாஜியார் இன்றைய ஆட்டத்தை துவக்கி வைத்தார்.

இதையடுத்து வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இளைஞர் கால்பந்து கழகத்தின் தலைவர் எஸ் அஹமது ஹாஜா தலைமை வகித்தார். எஸ்.எம்.ஏ அக்பர் ஹாஜியார், எஸ்.எம் முஹம்மது முகைதீன், மாவட்ட கால்பந்து கழக தலைவர் கோபால கிருஷ்ணன், இளைஞர் கால்பந்து கழகம் செயலாளர் S.S.M.G பசூல்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக இளைஞர் கால்பந்து கழகத்தின் பொருளாளர் அதிரை மைதீன் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் சாம்பியன் பட்டதை பெற்ற அதிரை SSMG அணியினருக்கு ரொக்க பரிசு, சுழற்கோப்பை, பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இரண்டாமிடத்தை பிடித்த தஞ்சை அணியினருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் ஆட்ட தொடரில் சாதனை நிகழ்த்திய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா முடிவில் கவுன்சிலர் இப்ராஹீம் நன்றி கூறினார். ஆட்ட அம்பயர்களாக வாசு தேவன், ஷபா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜம்ஷித் தொகுத்து வழங்கினார்.

இன்றைய இறுதி ஆட்டத்தை காண வழக்கத்தை வீட ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
 
 
 
 
 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...