இந்த நிலையில் முத்துப்பேட்டையை சுற்றி புகழ் பெற்ற ஜாம்புவானோடை தர்கா, சுற்றுலா தலமான அலையாத்திக்காடுகள், லகூன் மற்றும் சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. அதனால் சுற்றலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் இருப்பது வழக்கம்.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் பழமை வாய்ததாகும். வெள்ளைக்கார ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ரயில்வே நிலையம் மூலம் ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு பகுதியாகும். இந்த நிலையில் 4 வருடங்களுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. பணிகள் தற்பொழுது துவங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில்; பி கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைத்து சி கிரேடாக மாற்ற தென்னக ரயில்வே துறை முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ஒரு ரயில்வே நிலையமாக மட்டுமே செயல்படும். இதனால் இப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொலை தூர பயணம் மேற்கொள்ள பல்வேறு இடற்பாடுகள் மற்றும் வசதிகள் பெற வாய்புகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி மக்கள் விரைவில் போராட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து கட்சி மற்றும் மற்றும் அனைத்து அமைப்புகள் சார்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையிடம் இப்பிரச்சனைக் குறித்து புகார் தெரிவிக்க அனுமதி கோரப்பட்டது. இதனையடுத்து துணை சபாநாயகர் தம்பி துரை இன்று 12-ந் தேதி சனிக்கிழமை கரூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க அனுமதி வழங்கினார்.
இதனையடுத்து முத்துப்பேட்டையைச் சேர்ந்த அனைத்து கட்சியினரும் மற்றும் அனைத்து அமைப்பினரும் ஜாம்புவானோடை தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் நாளை கரூரில் தம்பித்துரையை சந்திக்கின்றனர். இதில் முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் தரம் உயர்த்தியும், கூடுதலான ரயில் போக்குவரத்து வசதியையும் பெற்று தர கோரிக்கை வைக்க இருக்கின்றனர்.
செய்தி:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
Mudhalil train 🚄 eppodhu varum. Adhudhan engalin mudhal korikkai....
ReplyDeleteMudhalil train 🚄 eppodhu varum. Sdhudhan engalin mudhal korikkai...
ReplyDelete