Pages

Friday, September 4, 2015

உலகை உலுக்கிய சிரியா குழந்தையின் ஜனாஸா சொந்த ஊரில் நல்லடக்கம் !

சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புகுவதற்காக, லட்சக்கணக்கான அகதிகள் கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 23 பேர், கடந்த புதன் அன்று, துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டிற்கு இரு படகுகளில் சென்றனர். அதில் படகு கவிழ்ந்து 12 பேர் நடுக்கடலில் மூழ்கி மூச்சுத்திணறி, துடிதுடித்து பலியாகினர். 9 பேர் மட்டுமே பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒருவன்தான் மூன்று வயதே ஆன ஐலன். அவனோடு சேர்ந்து அவன் தாயும் 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர். முன்னரே இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்திருந்தும் கூட தன் நாட்டிற்கு அகதிகளை அழைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் பிடியை இறுக்கியபடியே இருக்கிறார்கள் ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள்.

இந்த நிலையில், 3 வயது குழந்தையான ஐலன், கடற்கரை மணலில் முகம் புதைத்தபடி, வெறும் சடலமாகக் கிடக்கும் புகைப்படம், உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்கத் துவங்கியுள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த துருக்கியின் போட்ரம் மாவட்டம், கடல் கடந்து வரும் அகதிகளின் சந்திப்பு புள்ளியாக உள்ளது. இங்குள்ள அகியர்லார் கடற்கரையில், கடந்த புதன்கிழமை காலை 6 மணியளவில் நிலுபர் டெமிர் என்ற பெண் புகைப்பட-நிருபர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்நிலையில் இறந்த மூவரின் உடலும், அவர்களது சொந்த ஊரான சிரியாவின் கொமானியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் குடும்பத் தலைவரான அப்துல்லா கதறி அழுதபடி, தன் குடும்பத்தினரின் உடல்களை வலம் வந்த காட்சி, அங்கு கூடியிருந்தவர்களை விம்மி அழ வைத்தது.

எல்லையை கடந்தது குறித்து இறந்த குழந்தையின் தந்தையான அப்துல்லா குர்தி கூறுகையில், “என்னுடைய குடும்பத்தின் மரணம் அரபு நாடுகள் சிரிய அகதிகளுக்கு உதவ வைக்கும் என்று நம்புகிறேன்.” என்று பிற அகதிகளின் உயிர் காக்கும் அக்கறையுடன் கண்ணீர் சிந்தினார்.
 

நன்றி:மாலை மலர்

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அய்லான் குர்தியின் தந்தை அப்துல்லா குர்தி; துருக்கியின் மக்ளா நகரில் செய்தியாளர்களுக்கு கண்ணீருடன் கூறியது, பிழைப்பு தேடி குடும்பத்துடன் சென்றேன். விலைமதிப்பில்லாத குடும்பத்தை இழந்து விட்டேன். மகனை பிணமாக சொந்த நாட்டுக்கு கொண்டு செல்கிறேன். இதற்கு மேல் எதுவும் சொல்வதிற்கில்லை என்றார். அய்லான் பிணமாக ஒதுங்கி கிடந்த காட்சி கண்ணீர் சிந்த வைக்கிறது . இதெல்லாம் உலக மகா பண பேய்களின் (மேலைநாடுகளின் ) கோர தாண்டவம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...