Pages

Monday, September 14, 2015

புஹாரி ஷரீப் மஜ்லீஸ்: முதல்நாள் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை ஜாவியாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று 14-09-2015 அதிகாலை முதல் ஆரம்பமானது.

இன்று சுபுஹூ தொழுகைக்கு பின் திக்ருடன் துவங்கிய மஜ்லீஸ் சரியாக காலை 7-45 மணிக்கு அதிரை ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் தலைமை சொற்பொழிவோடு தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள், மஹல்லா நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் - வெளியூர் சகோதரர்கள் உட்பட 1400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரியாணி உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 40 நாட்களுக்கு தினமும் காலையில் நடைபெற இருக்கும் மஜ்லீஸ் நிகழ்ச்சி எதிர்வரும் [26-10-2015 ] அன்றுடன் நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜாவியா நிர்வாக கமிட்டியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...