Pages

Wednesday, September 23, 2015

அதிரையில் பரபரப்பான விற்பனையில் குர்பானி ஆடுகள் !

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை நாளை [ 24-09-2015 ] காலை தமிழகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு குர்பானி இறைச்சிகளை தானமாக வழங்குவார்கள். இதற்காக ஆடு, மாடு, ஒட்டகங்கள் விற்பனைக்காக அதிரையில் குவிந்துள்ளது. குறிப்பாக அதிரை சுற்று வட்டார கிராமப்பகுதியின் விவசாயிகளிடமிருந்து வாங்கி வரப்பட்ட செம்மறி இன ஆடுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

பெருநாள் பண்டிகை நாளை காலை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதிரையில் உள்ள இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் குர்பானி ஆடு விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முழு ஆடுகளாகவும், எடை வைத்தும் விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆடுகளும் சராசரியாக 16 முதல் 30 கிலோ வரை எடையளவு கொண்டுள்ளது. முழு ஆடு சராசரியாக 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பெரும்பாலும் காலை நேரங்களிலேயே ஆடுகளை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். அடையாளத்திற்காக மையினால் ஆன விலாசங்களை குர்பானி ஆட்டின் மீது பதிந்துவிட்டு மந்தைகளோடு ஆடுகளை மேய விட்டு செல்கின்றனர். பெருநாள் பண்டிகையின் முந்திய நாளில் ஆடுகளை திரும்ப மீட்டு செல்வார்கள்.

இது ஒருபுறமிருக்க வழக்கம் போல் இந்த வருடமும் அதிரையில் செயல்படும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கூட்டு குர்பானி திட்டத்தின் மூலம் ஆடு, மாடு, ஒட்டங்களின் பங்குகள் பொதுமக்களிடம் பெரும் பணி தீவிரமாகியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் குர்பானி தோள்களை வசூல் செய்யும் முயற்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் கிடைக்ககூடிய வருவாய் அனைத்தும் ஏழை எளியோரின் மருத்துவ உதவிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி

      தேதி மாற்றப்பட்டது.

      Delete
  2. தயவு செய்து தேதியை சரிபார்க்கவும்

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி

      தேதி மாற்றப்பட்டது.

      Delete
  3. தயவு செய்து தேதியை சரிபார்க்கவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...