Pages

Tuesday, September 1, 2015

காதிர் முகைதீன் கல்லூரி மற்றொரு மாணவன் பல்கலைகழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை !

அதிரையை சேர்ந்தவர் என். அஜ்மல்கான் இவரது மகன் இம்ரான்கான். சென்ற 2013 - 15 ஆம் கல்வியாண்டில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் பாடப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் சார்பில் தேர்வு முடிவுகள் வெளியானதில் இம்ரான்கான் பல்கலைகழக அளவில் மூன்றாம் இடம் படித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். நமது கல்லூரிக்கும் - பிறந்த ஊருக்கும் பெருமை தேடித்தந்த மாணவனை கல்லூரி நிர்வாகம், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், சக மாணவர்கள் - பெற்றோர் - உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதே பாடப்பிரிவில் காதிர் முகைதீன் கல்லூரியின் மாணவன் முஹம்மது ஹுசைனுதீன் பல்கலைகழக அளவில் முதல் இடம் படித்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...