Pages

Friday, September 4, 2015

நல்லாசிரியர் விருதிற்கு தலைமை ஆசிரியை சுராஜ் தேர்வு !

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் எம். சுராஜ். இவரது சிறப்பான ஆசிரியப்பணியை பாராட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு பெற்றுள்ளார்.

இந்த விருதை எதிர்வரும் [ 06-09-2015 ] ஆசிரியர் தினத்தன்று மணப்பாறையில் நடைபெறும் லயன்ஸ் சங்கத்தின் மாபெரும் விழாவில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கிறது. நல்லாசிரியர் விருதிற்கு தேர்வானதை அடுத்து தலைமை ஆசிரியை எம் சுராஜ் அவர்களை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் கடந்த SSLC அரசுப் பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைக்க வைத்தது. பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்தது. மாணவிகளை அதிக மதிப்பெண்கள் பெற கூடுதல் கவனம் செலுத்தியது. பெற்றோர் – ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி நிறை – குறைகளை கேட்டறிந்தது. அதிகாலை நேரங்களில் மாணவிகளுக்கு போன் செய்து படிப்பதற்கு நினைவூட்டியது உள்ளிட்ட பணிகளுக்காக தலைமை ஆசிரியை எம். சுராஜ் B.Sc., MA., B.Ed அவர்களுக்கு 'அதிரை நியூஸ்' சார்பில் கடந்த 25-05-2015 அன்று அதிரையில் நடைபெற்ற மாபெரும் கல்வி விருது வழங்கும் விழாவில் 'சிறந்த கல்விச்சேவை' விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவற்றை அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் முனைவர் இளங்கோவன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
*file photo

2 comments:

  1. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...