Pages

Thursday, September 17, 2015

வாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்க வேண்டுமே! டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

உலகின் கால் பகுதி நிலப் பரப்பு, முக்கால் வாசி நீர்ப் பகுதியாகும்.. அந்த நிலப் பரப்பில் ஏற்றத்தாழ்வு வராமல் நிரந்தரமாக  நிலை நிறுத்தி வைப்பது மலைப் பகுதியாகும். ஐஸ்லேண்ட் பகுதியிலும், பாலை வனத்திலும் மரங்கள், செடிகொடிகள் வளர்வது மிகவும் அரிது. இறைவனின் வரப் பிரசாதத்தால் அவைகள்  நீர் பிடிப்பு, காடுகள், மலைகள் , மற்றும் மழைப் பகுதிகளில் வளர்கின்றது.

மனிதன் உயிர் வாழ அவசியமாக கருதப்படுவது தண்ணீர், காற்று. மழையினால் குளங்கள், ஆறுகள், ஊற்றுகள் ஏற்படுகின்றன. .மரங்கள், செடி கொடிகள் மூலம் சுத்தமான காற்றினை மனிதன் சுவாசிக்க முடிகிறது. அந்த இயற்கை செல்வங்களிடையே சற்று காலாற நடப்பது, அதன் அழகை ரசிப்பது, தென்றல் காற்றினை ஸ்வாசிப்பது எந்தந்த விதத்தில் நோயற்ற வாழ்வினைத் தருகின்றது என்று உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த ஆய்வின் முடிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

அவைகள் பின்வருமாறு:
1) கனடா நாட்டின்  குடும்ப மருத்துவர், மெலிசா ஏலம், 'மரஞ்செடி, கொடிகள் உள்ள பூங்காவில் 20 நிமிட நேரம் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் ஒரு மனிதன், அவனுக்கு  கொடுக்கும் மருந்து, ஊக்க மாத்திரையினை விட மேலானது' என்கிறார்.

2) 2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஆராச்சியாளர்களின் குழுத் தலைவர் 'விக்கி செர்பர்', ' ஒரு கருத்தரங்கில் பங்கு பெரும் ஒரு நபர் அந்தக் கருத்தரங்கில் பங்கு பெறுமுன் சில மணித்துளிகள் ஒரு பசுமையான சூழலில் நடைப் பயணம் மேற்கொண்டால் அவருக்கு புது விதமான சிந்தனைகள் 60 சதவீதம் கூடுகின்றது' என்று கூறுகிறார். இதனேயே தான் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனைக்காக மாஸ்கோவிலோ, பாரிசிலோ, பெர்லினிலோ அல்லது வாசிங்டனிலோ கூடும்போது ஒரு பார்க்கில் கூட்டாக நடந்து செல்வதினைப் பார்க்கலாம்.

3) 2009 ஆம் ஆண்டு ஜப்பானில் நடத்திய ஆய்வில் 'வீட்டுகுள்ளிலில்லாது நடைப் பயிற்சியின் மூலம் வெளி உலகின் இயற்கைக் காற்றினை சுவாசித்தால் ஒரு மனிதனின் படபடப்பும், பதட்டமும் தணிந்து நிதானத்துடன் செயல் படுவான்' என்று சொல்கிறது. ஒரு மனிதன் ஒரு அறைக்குள் இருக்கும் ஜிம்மில்லில் உடற்பயிற்சி மேற்கொள்ளுவதிற்கும், பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவதிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

4) அமெரிக்கா மற்றும் தைவான் தொழிலாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் ஆய்வு நடத்தியபோது, 'ஜன்னல்  இல்லாத குடியிருப்புகளில் தூங்கும் தொழிலாலர்களை விட ஜன்னல் திறந்திருக்கும் வீடுகளில் தூங்கும் தொழிலாளர்கள் 45 நிமிடம் நிம்மதியாக களைப்பு நீங்கத் தூங்குகிறார்களாம்'. நீங்கள் சென்னை போன்ற நகரங்களில் தெருவோரம் வசிக்கும் மக்களைப் பார்க்கலாம், அவர்கள் அருகில் கனரக வண்டி கூடப் போகும். ஆனால் அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருப்பார்கள். அதே நேரத்தில் வசதியுடன் இருப்பவர்கள் ஏசி அறையில் படுப்பார்கள், ஆனால் தூக்கம் வராது புரள் வதினைக் கேள்விப் படலாம்.

5) ஜப்பானில் பூங்காக்களில் நடப்பவர்களை 'சின்ரின் யோக்கு' என்று அழைப்பார்களாம். அப்படியென்றால் அவர்களை காடுகளில் குழிப்பவர்கள் என்று அர்த்தமாம். பூங்காக்களில் நடப்பது மூலம் ரத்த ஓட்டம் சீராகவும், நாடித் துடிப்பு அதிகமாகவும், புற்று நோயினை தடுக்கும் அரு மருந்தாகும்' என்கிறார்கள்.

6) ஜப்பான் டோக்யோ நகரில் இயற்கை சூழலில் வாழும் 3144 நபார்களை பற்றி ஆய்வு நடத்தியதில் அவர்கள் இயற்கை சூழல் இல்லாது வாழும் நபர்களைவிட அதிக நாட்கள் வழ்கின்றனராம்.

7) ‘டச்’ நாட்டில் 2009ஆம் ஆண்டு 10,089 நபர்களிடம் நடத்திய ஆய்வில், 'இயற்கை சூழலில் வாழும் நபர்கள் தாங்கள் தனியாக வாழ்கின்றோம் என்ற உணர்வினையே  மரம், செடி, கொடி என்ற பசுமையினை கண்டதும் மறந்து விடுகின்றனராம்.

8) இங்கிலாந்து நாட்டில் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் இரண்டு விதமான நபர்களிடம் ஆய்வு நடத்தினார்களாம். அவர்களில் ஒரு குழுவினர் கடைப் பகுதியில் பயிற்சியினை மேற்கொண்டோர். மற்றொரு பகுதியினர் பூங்காக்களில் பயிற்சியினை மேற்கொண்டோர். அவர்களில் இயற்கை சூழலில் பயிற்சியனை மேற்கொண்டோர் மிகவும் அமைதியாகவும், மூளை சிந்தனையினை உடனுக்குடன் செயல் படுத்துவர்களாகும் உள்ளனராம்.

9) 2001 ஆம் ஆண்டு அமெரிக்க வாசிங்டன் நகரில் நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண்களிடம் ஆய்வு நடத்தியபோது, ஒரு நாளைக்கு 20 நிமிடம் பயிற்சியினை மேற்கொண்ட பெண்கள் தன்னம்பிக்கை கூடியவர்களாகவும், தோழ்வி மனப்பான்மை குறைந்தவர்களாகவும் இருந்தார்களாம்.

10) 2001ஆம் ஆண்டு அமெரிக்கா சிக்காக்கோ நகரில் இயற்கை சூழ கூட்டமாக அப்பார்ட்மெண்ட்டில் வசிப்பவர்கள் திருட்டுப் பயமில்லாமல், சுயக் கட்டுபாடுடன் நடந்து கொள்கிறார்களாம்.

11) 1984இல் அமேரிக்கா பென்சில்வேனியா நகர் மருத்துவமனையில் நடத்திய ஆராய்ச்சியில் சிகிச்சை எடுக்க வரும் நோயாளிகள் தங்கியிருக்கும் அறைகளின் ஜன்னல் பக்கம் மரம்,செடி, கொடிகள் இருந்தால் அவர்கள் நோயின் வலியினை மறந்து, சீக்கிரமே குணமாகி விடுகின்றார்கலாம். நான் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யூனியன் சிட்டியில் உள்ள பிரசவ மருத்துவ மனைக்குச் சென்றேன். அங்கே பார்வையாளர் பகுதியில் ஒரு பெரிய மீன் தொட்டி வைத்து அதில் பல்வேறு மீன்கள் விளையாட விட்டிருந்தார்கள். அதன் நோக்கத்தினைக் கேட்டபோது, 'மீன்கள் வாலை அடித்து விளையாடும்போது கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வயிற்றில் விளையாடும் சிசுகளுக்கு இணையாக நினைத்து டாக்டரைப் பார்க்க காத்திருக்கும் நேரத்தில் இருக்கும் வலியினையே மறந்து விடுவார்களாம்.

12) ஒரு தொழிற்சாலையிலோ அல்லது ஒரு அலுவலகத்திலோ மரம், செடி, கொடிகள் அதிகமாக இருந்தால் தொழிலாளர்கள் லீவு எடுப்பது குறைவாகவும், தொழிற்சாலை உற்பத்தி அதிகமாக இருக்கின்றதாம்.

13) மேலை நாட்டில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுவோருக்கும், நமது நாட்டில் பார்க்கில் நடைப் பயிற்சி செய்பவர்களுக்கும் நிறைய வேறுபாடு காணலாம். அமெரிக்காவில் நடைப் பயிற்சியின் போது ஒரு அமெரிக்கரை பார்த்தால், 'ஹாய்' என்பதுடனும், சிட்னியில் பயிற்சி மேற்கொள்ளும்போது 'ஹலோ' என்று பெயரளவிற்கு சொல்லிவிட்டு  நகன்று விடுவார்கள். ஆனால் நம் நாட்டில் அறிமுகமான நபரின் பூர்வீக சரித்திரத்தினையே பயிற்சி முடிவதிற்குள் கேட்டு விடுவார்கள். பந்த, பாச உணர்வுடன் நடந்து கொள்வார்கள். இன்பம், துன்பத்தினில் கலந்து கொள்வார்கள்.

அதில் சில நேரங்களில் சிரிப்பாகவும் மாறி விடும் என்பதினை ஒரு உதாணரம் மூலம் விளக்கலாம் என எண்ணுகின்றேன்.

எங்களுடன் பார்க்கில் நடைப் பயிற்சிக்கு வரும் தேவா என்ற நண்பர் அன்று பார்க்குக்கு வரவில்லை. அவர் வராதது பற்றி விசாரித்த ஒரு நண்பர் தவறாக அவருடைய மாமி இறந்து விட்டார்களாம், அவரை வரும் வழியில் சாவு வீட்டில் பார்த்தேன் என்றார். உடனே சில நண்பர்கள் ஒரு மாலையினை வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்றபோது அப்போது தான் தெரிந்ததாம் அவருடைய மாமி இறக்கவில்லை, மாறாக பக்கத்தில் குடியிருக்கும் ஒரு மாமி இறந்து விட்டது என்று. அந்த அளவிற்கு நடைப் பயிற்சியில் ஜாதி, மதம், இனம், வயது, உத்தியோகம், வசதி என்று பாராது ஒரு பழக்கக் கூட்டம் ஒன்று சேரும் இடம் நடைப் பயிற்சி பூங்காவாகும். சில நேரங்களில் சம்பந்த பேச்சும், வியாபார ஒப்பந்தமும் நிறைவேறும். எல்லா பார்க்கிலும் ஒரு அசோசியேசன் அமைத்து அந்த பூங்கா வளர்ச்சிக்கு யோசனையும், வழியும் செய்வார்கள்.

ஆகவே மேற்கூறிய ஆராய்ச்சிகள் பழமை காலத்தில் கிராமங்களில் வாழ்ந்தவர்களும், காடுகளில் வாழ்ந்த பழங்குடியினர், தவம் செய்த முனிவர், சித்தர் ஆகியோர் ஆரோக்கியமாகவும், நீண்ட நாட்களுக்கு வாழ்ந்த ரகசியம் இயற்கையில் அவர்கள் வாழ்ந்ததால் தான். நாம் சரித்திரத்தில் அசோக சக்கரவர்த்தி குளங்கள், தோண்டினார், மரங்கள் வெட்டினார், ரோடுகள் அமைத்தார் என்றெல்லாம் படித்து இருக்கின்றோம். ஆனால் அந்த நீர் நிலைகள் தூந்து போனதிற்கும் காரணம் அவைகளில் வீட்டு மனைகள் அமைத்த மனிதன் தான் காரணம். மரங்கள், மற்றும் சாலைகள் வெட்டப் பட்டதிற்கு காரணம் போராட்ட காலங்களில் அரசியல் கட்சிகள் அவைகளை வெட்டியும்,   தோண்டியதும்  தான் காரணம்.  அதனால் மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும், வாழ்வாங்கு வாழ மரங்கள் அழிப்பதினை விட்டு விட்டு, மரங்கள் நட்டு அந்த மரங்களின் அழகினை ரசிக்க சிறிது காலாற நடப்போமா ?

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

5 comments:

 1. உண்ணும் உணவே மருந்து என வாழ்ந்த மூதாதையர்கள், மருந்து, மாத்திரைக்கு பதிலாக, மூலிகைச்செடிகளையே பயன்படுத்தி, நோயை குணமாக்கி வந்தனர். நாகரிக மாற்றம் ஏற்படாத அந்த காலத்தில், மூலிகையின் பயன்பாட்டினை அறிந்த மூதாதையர்கள், அதனை வளர்த்து வந்ததுடன், எந்த நோய்க்கு எந்த மூலிகை சாப்பிட்டால் நல்லது என தெரிந்து, அதனை சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். கீரை உள்ளிட்ட சத்து வகையான காய்கறிகளையும் உணவில் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. பின், காலப்போக்கில், சத்தான உணவுகளை உண்ணாமல், நாகரிக மாற்றம் என்ற பெயரில், கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு தீங்கு தரக்கூடிய உணவு வகைகளை உண்ணத்துவங்கினர். விளைவு, பெயர் தெரியாத நோய்கள் தினமும் முளைத்து வருகின்றன.

  உடல் பருமனை குறைக்க மக்கள் ஜிம் க்கு போகின்ற சூழ்நிலை ஏற்படக் காரணம் விளையாட்டு மைதானம் குப்பைக் கொட்டும்மிடமாக மாறியது மட்டுமல்லாமல் அபகரிப்பும் உண்டு. பாலில் கலப்படம், விதையில் ரசாயனத்தை சேர்த்து காய்கறி வளர்த்தல், சுவாசிக்கும் காற்றில் கூட மாசுபடித்தல், மனிதனால் ஏற்படுத்திய தீங்குகளினால் அவனின் வாழ்நாள் சுருங்கி விட்டது.

  இயற்கையோடு ஒன்றி வாழ்தால் நோயில்லாமல் வாழலாம் அதற்க்கு நடைபயிற்சி முக்கியம் என்பதை சிறப்பு கட்டுரை தருகிறது. நல்லதொரு ஆக்கம் நாமும் அதனை கடைபிடிப்போம். படைப்புகளில் அருமையான தகவல் -வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. பதிவுக்கு நன்றி.

  நல்ல பதிவுக்கு இது ஒரு உதாரணம்.

  பசுமையும் மனிதனும் இன்று எவ்வளவு தூரத்தில் இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டி, அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பல சுகாதார கேடுகளையும், மனிதன் பசுமையோடு ஒட்டி வாழ்ந்ததால் உண்டாகும் பல சுகாதார நன்மைகளை இந்த ஆக்கத்தில் தந்து, இனிமேலும் இது நீடித்தால் பேராபத்துதான் என்பதை உணரவைத்த “டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)” அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.
  K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
  த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
  தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
  National Consumer Protection Service Centre.

  ReplyDelete
 3. ஒரு மனிதன் நோய்நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ இயற்க்கை சூழ்நிலையும் இயற்கைக் காற்றும் மிகமிக அவசியம் என்பதை ஆதாரத்துடன் பட்டியலிட்டு அழகாக கட்டுரை வடித்து அறியத்தந்துள்ளீர்கள். அருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. Assalanu alaikum Web team
  I remember during my teaching days in KM College
  Prof.Hasan, Shibili, Md.Ali Jinna and I used to go for walk on every Friday evening upto Raja madam river and return after a brief rest. We enjoyed walking aling the creek, coconut and paddy fields. Adirai is surrounded by trees. I heard that a new park has been created around the Mosque. It is a welcome one.Similarly we must also create a library in the mosque to study after walk and prayer.
  Good suggestiins were given by Masthan Gani, Jamal Mohamed and Moisa. I am indebted to the..

  ReplyDelete
 5. Assalanu alaikum Web team
  I remember during my teaching days in KM College
  Prof.Hasan, Shibili, Md.Ali Jinna and I used to go for walk on every Friday evening upto Raja madam river and return after a brief rest. We enjoyed walking aling the creek, coconut and paddy fields. Adirai is surrounded by trees. I heard that a new park has been created around the Mosque. It is a welcome one.Similarly we must also create a library in the mosque to study after walk and prayer.
  Good suggestiins were given by Masthan Gani, Jamal Mohamed and Moisa. I am indebted to the..

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...