Pages

Sunday, September 6, 2015

காதிர் முகைதீன் பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா !

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி தலைமை வகித்தார். காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர்  முனைவர் ஏ ஜலால் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் ஏ.எம் உதுமான் முகைதீன், அல் மஹா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் 'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினராக திருச்சி உறையூர் காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியை நற்றமிழ் நாவரசி நா. சாத்தம்மைப்பிரியா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி அனைவரையும் அசத்தினார்.

முன்னதாக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் முனைவர் ஆ. அஜ்முதீன் வரவேற்புரை ஆற்றினார். விழா முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியர் எம். உமர் பாரூக் நன்றி கூறினார்.

விழாவில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பழங்கள் அடங்கிய பை மற்றும் அதிரை நிருபர் பதிப்பகம் வெளியிட்டில் இக்பால் எம். ஸாலிஹ் அவர்கள் எழுதிய 'நபிமணியும் நகைச்சுவையும்' என்ற நூல் அன்பளிப்பு செய்யப்பட்டது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு மற்றும் 'நபிமணியும் நகைச்சுவையும்' என்ற நூல் வழங்கப்பட்டன

சமீபத்தில் பல்கலைகழக அளவில் வேதியியல் பாடப்பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்திய காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் முஹம்மது ஹுசைனுதீன் மற்றம் இதே பாடப்பிரிவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை நிகழ்த்திய இம்ரான்கான் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளியின் முதுகலை ஆசிரியர் நாகராஜான் அவர்கள் மறைந்த மாமேதை அப்துல் கலாம் ஆசிரியர்களுக்கு கூறிய 10 அறிவுரைகளை உறுதி மொழியாக வாசித்தார். இவற்றை ஆசிரியர்கள் அனைவரும் வழிமொழிந்தனர்.

விழா ஏற்பாடுகளை கடந்த 3 வருடமாக சிறப்பாக நடத்திவரும் அதிரை நிருபர் பதிப்பகம் சார்பில் இந்த வருடமும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விழாவில் 'எழுத்தறிஞர்' அதிரை அஹமத், 'நாவலர்' நூர் முஹம்மது, மருத்துவர் ஹாஜா முகைதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனீபா, முதுகலை ஆசிரியர்கள் லியாகத் அலி, சீனிவாசன், தமிழ் ஆசிரியர் சண்முகம் மற்றும் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...