Pages

Wednesday, September 9, 2015

முத்துப்பேட்டையில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் காருக்கு தீ வைப்பு !

முத்துப்பேட்டை பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலராகவும், பா.ஜ.க மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் மாரிமுத்து இவருக்கு சென்ற மாதம் தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

இவருக்கு சொந்தமான கார் பழுதடைந்ததால் செம்படவன் காடு ரயில்வே கேட் அருகில் உள்ள மெக்கானிக் செட்டில் பழுது நீக்குவதற்காக நிறுத்திருந்தார். நேற்று காலை காரை டெலிவெரி எடுக்க காத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2:30 மணிக்கு யாரோ மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அப்பொழுது ரோந்து பணியில் இருந்த போலீசார் கார் பற்றி எரிவதை கண்டு முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் கார் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.

இது குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் மாரிமுத்து புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் கார் எப்படி தீ பிடித்தது ? இதற்கு யார் காரணம் ? வருகின்ற விநாயகர் ஊர்வலம் பின்னணியா ? போன்ற சந்தேகங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று காலை திருவாரூரிலிருந்து கை ரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மேலும் திருவாரூரிலிருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

பா.ஜ.க நிர்வாகியின் கார் எரிந்த சம்பவம் கேள்விப்பட்டதும் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகாணந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் முருகேஷ், ஒன்றிய தலைவர் தோழி.செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் முத்துப்பேட்டையில் வருகிற 22-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடக்கும் நிலையில் தற்பொழுது பா.ஜ.க மாவட்ட செயலாளர் மாரிமுத்துவின் கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...