Pages

Friday, September 4, 2015

டோல்கேட் முற்றுகை போராட்டத்தில் அதிரை தமாகாவினர் !

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 28 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணங்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை 50 சதவீதமாகக் குறைக்கவும், காலாவதியான நிலையில் இயங்கும் சுங்கச்சாவடிகளை உடனே மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி இளைஞரணி சார்பில் சுங்கச்சாவடிகள் முன் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் ( டோல் கேட்) நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தில் ஏராளமான தமாகாவினர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முற்றுகை போராட்டத்தில் அதிரையிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம், தமாகாவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் M.M.S பஷீர் அஹமது. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை பேரூர் நிர்வாகிகள் M.M.S நிஜார், M.M.S இக்பால், M.M.S ரபி அஹமது, புஹாரி, ரபிக் அஹமது, வீரப்பன், ராஜா, ராஜேந்திரன், ரத்தினம், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...