Pages

Friday, September 4, 2015

அதிரை - பட்டுக்கோட்டை பாயின்ட் டூ பாயின்ட் பேருந்து பள்ளத்தில் சாய்ந்தது !

அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கும் - பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கும் தினமும் பாயின்ட் டூ பாயின்ட் அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இந்த பேருந்துகளில் ஏராளமான அதிரை மற்றும் பட்டுக்கோட்டை ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் அதிரையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டையை நோக்கி விரைவு பேருந்து பயணமானது. பேருந்து கரிக்காடு அருகே சென்ற போது எதிரே தாறுமாறாக ஓட்டிவந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோத இருந்தது. நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் சாய்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. விபத்து குறித்து பட்டுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...