Pages

Sunday, September 6, 2015

வடமாநிலத்தவர் வருகையும்...அச்சுறுத்தலும்!

பெட்டி பெட்டியாய் வந்திறங்கும்  பிற  மாநிலத்தவர்கள்,  தமிழ் தவிர அனைத்து பிற மொழிகளை பேசும் பல இனத்து மக்கள், டாஸ்மாக் சரக்கை மிஞ்சும் போதை பாக்குகள் போடும் மக்கள்  கூட்டம் என நாம் இருப்பது தமிழ்நாடா இல்லை, பிற மாநிலமா என சந்தேகம் கொள்ளுமளவிற்கு, வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் பிற மாநிலத்தவரின் வருகையால் திணறி வரும் நிலையில், குற்றம் புரிவதற்காக  தமிழகத்தில் கால் வைக்கும் பிற மாநிலத்தவரின் செயல்களால் போலீசாரும் கலக்கமடைந்துள்ளனர். வங்கியில் நூதனக் கொள்ளையில் பிற மாநிலத்தவரின் கை வரிசை இல்லாத செய்தியை பார்ப்பது அபூர்வமாகி வருகிறது.

சுமார் பத்து லட்சம் வடமாநிலத்தவர் தமிழகத்தில் தங்கி இருப்பதாக கருதப்படுகிறது. இது தவிர நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் தமிழகம் நோக்கி படை எடுத்து வருகின்றனர். சென்னை, மதுரை, கோவையில் சில தெருக்கள், வர்த்தக பகுதிகள் வட மாநிலத்தவர்களின் வியாபார மையங்களாக  உருவாகும் அளவிற்கு தமிழகம் வாழ வைக்கிறது. தொழிலுக்காக வந்தவர்கள் சொந்த மாநிலமாக தமிழகத்தை கருதி வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிறிய தள்ளு வண்டியில் சமோசா விற்று கோடீஸ்வரனாக மாறிய உழைப்பாளிகளும் உண்டு. பாலும் பழமும் சாப்பிட்டவர்கள் பாவ் பஜ்ஜியும்,  பர்கரும், சமோசாவும் சாப்பிட நாமும்  பழகி விட்டோம்.

ஒரு பக்கம்  கட்டட வேலைகள், ஹோட்டல், சாலை வேலைகள், நகை பட்டறை, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணி புரியும் உழைப்பாளிகளாக வட மாநிலத்தவர் தமிழகத்தில் கால் ஊன்றினாலும், மறு பக்கம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கொலையும், கொள்ளையும் செய்யும் கும்பலும் ஊடுருவி வருவதை மறுக்க முடியாது.

விடுதலைப் போராட்ட களத்திலும், தொழில் வளர்ச்சிக்கும் முன்னோடிகளாக இருந்த வட மாநிலத்தவர் பற்றிய நல் எண்ணத்தை சீர் குலைக்கும் விதமாக, நடந்தேறும் ஒரு சில குற்றச் செயல்கள் ஒட்டுமொத்த  வட மாநிலத்தவரின்   வருகையையும் சந்தேகம் அடைய வைக்கிறது. தமிழகத்து குற்றப்பின்னணி கொண்டவர்களது தொடர்பு அதிக பட்சம் தமிழகத்தை தாண்டி இருக்காது. ஆனால் வட மாநிலத்து குற்றப்பின்னணி கொண்டவர்களின் தொடர்பு பல நாடுகள் வரை சென்றிருக்கும்.

கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி அருகே உள்ள பேங்க் ஆப்  பரோடா (கதவு, எச்சரிக்கை கருவி, கேமரா இல்லாத பெருமைக்குரிய வங்கி) வங்கி கிளையில் நடந்த ரூ.12 கோடி மதிப்பிலான நகைக் கொள்ளையில் தொடர்புடைய வட மாநிலத்தவரின் கைது, வட மாநிலத்தவரின் வருகையை முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தமிழக அரசுக்கு எச்சரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. திருட்டு கும்பலைச் சேர்ந்த வட மாநிலத்தவரோடு, பாகிஸ்தானியர்களும், வங்க தேசத்தவர்களும் நெருங்கிய தொடர்பில்  உள்ளதால் எளிதாக கொள்ளை அடித்து விட்டு, ஒரு சில நாட்களில் வெளி மாநிலத்திலும், வெளி நாட்டிலும் தங்கி விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கள்ள நோட்டு புழக்கம், போதைக் கும்பலுடன் தொடர்பு, கொள்ளைகளில் நவீன தொழில் நுட்பம் என வட மாநிலத்தவரின் குற்றச் செயல்கள் தமிழக மக்களை மிரட்டி வருகிறது.

பொதுவாகவே தமிழர்கள், உறவுகளால் ஏற்படும் உணர்ச்சிக்கு அடிமையாகி கொலை செய்பவர்களே அதிகம். ஆனால், வட மாநிலத்தவர்கள் நகை, பணம் கொள்ளை சம்பவத்திற்காக நடக்கும் கொலைகளே அதிகம். சமீபத்தில் கூட விலை உயர்ந்த செல்போனுக்காக வட மாநிலத்து  இளைஞர், மருத்துவப் பெண்மணியை கொன்ற சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.

என்னதான் நாம் அனைவரும் இந்தியர்கள் என்றாலும், பிற மாநிலத்தவர்கள் வருகை மூலம் நமக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க வேண்டிய அவசியத்தில் தமிழகம் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசுபவர்களும் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ஏற்கனவே ஆள் பற்றாக்குறை, வேலைப்பளு, தினமும் சாலை   மறியல், டாஸ்மாக் கடை பாதுகாப்பு , வி.ஐ.பி. பாதுகாப்பு என  தமிழக போலீசார் திணறி வரும் நிலையில், தொழில் செய்பவர்கள் போன்று வந்திறங்கும் குற்றச் செயல் எண்ணம் கொண்டவர்களை களைய வேண்டியது அவசியமானது.

பிற மாநிலத்தவரின் வருகையையும், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் அல்லது வேலையையும்  அடையாள அட்டை சான்றுடன் ஆவணப்படுத்த வேண்டும்.

லாரியில் வந்து திருடிச் செல்லும் கும்பலும் அதிகமாகி வருவதால், தமிழக எல்லையில் நவீன ஸ்கேன் மூலம் சோதனை செய்யவும் திட்டம் வேண்டும்.

வங்கி பணப் பரிவர்த்தனைகளை முறைப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொம்மைகள் என்ற பெயரில் பிற மாநிலத்தவர் விற்கும் சீனக் குப்பைகளை விற்க கடுமையான  தடை வேண்டும்.

தமிழக போலீசாரிடம், தமிழகத்தில் தங்கியுள்ள பிற மாநிலத்தவர் பற்றிய சரியான புள்ளி விபரங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. எங்காவது ஒரு கொள்ளை, அசம்பாவிதம் நடந்த பின் துப்பு துலக்க வட மாநிலம், பிற நாடுகளிடம் உதவி கேட்பதற்கு பதிலாக, இங்குள்ளவர்களை பற்றிய சரியான தகவல்களை முறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

கொலை, கொள்ளையத் தாண்டி தீவிரவாதச் செயல்கள் அரங்கேறி விடாதபடி தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எங்கோ ஒரு இடத்தில குண்டு வெடித்த பிறகு அடையாள அட்டையை சோதனை செய்யும் நம்மூர் போலீசார், அந்த அடையாள அட்டையை பிற மாநிலத்தவரிடம் இருந்து நிரந்தரமாகப் பெற்று ஆவணப்படுத்துவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

காலம் கடந்து கொண்டு வரப்படும் சட்டமும், போலீசாரின் கடமை மறந்த அலட்சியத்தால் நடக்கும் செயலுக்கும், அப்பாவி உள்ளூர் மக்களே நிம்மதி இழந்து போவார்கள் என்பது உறுதி.

எஸ். அசோக்
நன்றி:விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...