Pages

Wednesday, September 9, 2015

அதிரையை நோக்கி தவழ்ந்து வரும் ஆற்று நீரை வரவேற்க சேர்மன் அழைப்பு !

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் உத்திரவிற்கிணங்க தஞ்சை மாவட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 13-08-2015 அன்று கல்லணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டப்பட்டது. கல்லணையிலிருந்து டெல்டா சாகுபடிக்காக  தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து கடைமடை பகுதிகளில் தண்ணீர் தவழ்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வறண்டு கிடக்கும் அதிரை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடக்கோரி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார்.

இந்நிலையில் இவர் மேற்கொண்ட முயற்சிக்கு பலனளிக்கும் வகையில்
இன்னும் சில மணி நேரங்களில் ஆற்று நீர் சிஎம்பி வாய்க்கால் வழியே அதிரை குளங்களுக்கு வரஇருக்கிறது. தவழ்ந்து வரும் ஆற்று நீரை பாதுகாப்பாக ஊர் கொண்டு வந்து வறண்டு காணப்படும் அதிரையின் அனைத்து குளங்களுக்கு நிரப்ப தன்னார்வலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிரை பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் ஊழியர்களின் உதவியோடு சிஎம்பி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பு - உடைப்புகளை சீர்செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

5 comments:

 1. Allah nalla sukaththai tharuvan
  adirai makkalen nanmaikkaha
  poradum thalaivar& su...mu...ka.

  ReplyDelete
 2. வரும் தண்ணீரை எல்லா குலங்களுக்கும் செல்ல வேண்டுமென்றால் ஆக்கபூர்வமான தடுப்பணைகள், தூர்வாருதல், கரைகளை செப்பனிடுதல், வாய்கால்களை செப்பனிடுதல் , கடைமடைக்கு போகும் வழியில் விளைந்திருக்கும் செடிகொடிகளை அப்புறபடுத்தி, நதியில் படர்ந்திருக்கும் படர்தாமரைகளை அகற்றுதல், போன்ற வேலைகள் முன்பு செய்திருக்க வேண்டும். எந்த வேலையும் நதிநீர் கட்டுப்பாட்டு வாரியம் செய்யாமல் இருப்பதால் வீணாக கடலில் தான் தண்ணீர் சேரும். அதிரையில் குறுப்பிட்ட குளங்களுக்கு மட்டும் நீர் வரும் வாய்ப்பு உள்ளது; வார்டு கௌன்சிலர் தக்க நடவடிக்கை எடுத்தால் தரகர் தெரு குளமும் ஜொலிக்கும் , முயற்சி நடக்குமா?

  ReplyDelete
 3. தேவ்வை இல்ல அரிஉரை

  ReplyDelete
 4. எந்த வார்டு மெம்பெர் வந்து நிக்கபோறான்

  ReplyDelete
 5. சேர்மனை பாராட்டுவோம்.

  அதேநேரம்

  சிஎம்பிக்கு வரும் காவிரித் தண்ணீரை வரவேற்க சி எம் பி லைனில் உள்ள அனைத்து வீடுகளின் சாக்கடைகளும் தயாராக அணிவகுத்து நிற்கின்றன என்பதையும் வேதனயுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...