Pages

Sunday, September 27, 2015

ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஈத்மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி !

இஸ்லாமியர்கள் மற்றும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் மக்களிடேயே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அதிரையை சார்ந்த தன்னார்வல இளைஞர்களின் கூட்டு முயற்ச்சியில் 3 ம் ஆண்டாக பெருநாள் சந்திப்பு ( ஈத் மிலன் ) - சமய நல்லிணக்க விழா நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் தலைமை வகித்தார். அதிரை அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரபல எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனருமான ஆளூர் ஷாநவாஸ், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், முன்னாள் தொலைக்காட்சி திரைப்பட நடிகர் ஏ. முஹம்மது அமீருதீன் ஆகியோர் கலந்து கொண்டு மத நல்லிணக்க உரையாற்றினார்கள்.

முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் தனது கணீர் குரலில் வரவேற்புரை ஆற்றினார். இதில் இந்தியாவில் முஹலாயர் ஆட்சி செய்த காலத்தில் இந்து - முஸ்லீம் பிரிவினை ஏற்பட காரமணமாக அமைந்தது குறித்து எடுத்துரைத்தது நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஹைலைட்டாக அமைந்தது.

விழா முடிவில் காதிர் முகைதீன் கல்லூரி அரபித்துறை தலைவர் மவ்லவி முஹம்மது இத்ரீஸ் நன்றி கூறினார். இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த கல்வியாளர்கள் - அரசு அலுவலர்கள் -  சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - பத்திரிகையாளர்கள் - மாணவர்கள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை ஈத்மிலன் கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர். வந்திருந்த அனைவருக்கும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் சிறப்பான வரவேற்பும், விருந்து உபசரிப்பும் செய்யப்பட்டது.

விழாவின் துளிகள்:
1. விழாவில் அதிரை ஈத் கமிட்டியினர் வெள்ளை நிறத்தில் ஒரே யூனிபார்ம் அணிந்து களப்பணியாற்றியது பார்ப்போர் அனைவரையும் கவர்ந்தது.

2. கூட்டம் அதிகமானதால் விருந்தாளிகளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறமத நண்பர்களுக்காக தமது இருக்கையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

3. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரபல எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனருமான ஆளூர் ஷா நவாஸின் அனல் பறக்கும் மதநல்லிணக்க பேச்சை கேட்ட அனைத்து சமய நண்பர்களும் இஸ்லாம் குறித்து சமூகத்தில் பரவும் தவறான கருத்துகளுக்கான காரணம் யார் ? என்பதை தெளிவாக அறிந்துகொண்டனர்.

4. விழா நடைபெற்ற மண்டப பகுதி முழுவதும் சமூகத்திற்கு பயனளிக்கும் சிறந்த விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் குர்ஆன் ஹதீஸ் தமிழாக்கங்கள் அடங்கிய போஸ்ட்டர்களை வருகையாளர்களின் பார்வையில் படும்படி வைத்தது குறிப்பிடத்தக்கது.

5. விழாவில் விருந்தாளிகளாக வந்து கலந்துகொண்ட பிற மத சமயத்தவர்களுக்கு முதலில் விருந்துண்ண அழைத்து சென்ற மாண்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

6. விழாவில் கலந்துகொண்ட பிற மத நண்பர்களுக்கு துண்டு சீட்டுகள் வழங்கி நிகழ்ச்சி குறித்து கருத்துகள் - ஆலோசனைகளை எழுத்துகள் மூலம் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலர் பல்வேறு கருத்துகளை பதிந்துள்ளனர்.

7. மேலும் இஸ்லாம் மார்க்கம் குறித்து எழும் கேள்விகளுக்கு விளக்கங்கள் மற்றும் புத்தகங்களை கோயம்புத்தூரிலிருந்து வருகை தந்த குழுவினர் சார்பில் வழங்கப்பட்டது. இதில் பிற மத நண்பர்கள் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர். குர்ஆன் தமிழாக்கமும் வழங்கப்பட்டது.

8. விழாவில் கலந்துகொண்ட இஸ்லாமிய நண்பர்களுக்கு லுஹர் தொழுகை மண்டபத்தில் நடத்தப்பட்டன.

9. சிறப்பு அழைப்பின் பேரில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சேதுராமன், ஜித்தா தமிழ் சங்க பொறுப்பாளர் ராஃபியா, காதிர் முகைதீன் கல்லூரி துறை தலைவர்கள் - பேராசிரியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், எழுத்தாளர் அதிரை அஹ்மத், நாவலர் நூர் முஹம்மது, தலைமை ஆசிரியர் மகபூப் அலி, வட்டார சுகாதார துறை அலுவலர் விவேகானந்தன், அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

11. கடந்த 7 ஆண்டுகளாக திருகுர்ஆன் குறித்து ஆய்வு நடத்திவரும் தனியார் கல்லூரியின் கணக்காளர் திரு.சுந்தரக்கண்ணன் ஆர்வமாக விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

12. சிறப்பு அழைப்பாளர்களாக நரிக்குறவ சமுதாயத்தவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சி முடியும்வரை இருக்கையில் அமர்ந்து விழாவை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

13. விழா முடிவில் விருந்தாளிகள் அனைவருக்கும் இஸ்லாம் குறித்து புத்தகம் மற்றும் பிஸ்கட் பாக்கெட் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

களத்திலிருந்து அபூ அஜீம்

5 comments:

 1. முத்துபேட்டை போன்ற ஊர்களிலும்தொடரட்டும்!

  ReplyDelete
 2. ஆளுர் நவாஸ் அவர்களின் பேச்சை பதிவேற்றம் செய்தால் நன்மையாக இ௫க்கும்

  ReplyDelete
 3. Mashallah. ..தொடருட்டும்

  ReplyDelete
 4. Mashallah. ..தொடருட்டும்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...