Pages

Tuesday, September 8, 2015

முத்துப்பேட்டையில் நேற்று பயங்கர இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கன மழை. வீடுகள் இடிந்தது.

முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் மழைப் பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்து வந்தது. நேற்று காலையிலிருந்து மாலை வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் மக்கள் வெளியில் வராமல் வீட்டில் முடங்கினர். பகல் 12:30 மணி அளவில் திடீரென்று பயங்கர இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மதியம் 2:30 மணி வரை கனமழை பெய்தது. அப்பொழுது பள்ளிகளில் படித்த மாணவர்கள் இடி மின்னலை கண்டு பயந்து வகுப்பறையில் அச்சத்துடன் காணப்பட்டனர். சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரங்கள், வியாபார நிறுவனங்களின் விளம்பர போர்டுகள் உடைந்து விழுந்தன. பல இடங்களில் வீடுகளும் இடிந்து சேதமாகியது. இதில் முத்துப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரது கூரை வீட்டில் நேற்று மதியம் அவரது மனைவி பஞ்சவர்ணம் மகன் குமார் ஆகியோர் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்பொழுது சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் கூரை வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் தாயும் மகனும் மாட்டிக் கொண்டனர். உடன் அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் ஒரு பகுதியைப் பிரித்தெடுத்து இருவரையும் காயமின்றி காப்பாற்றினர். இதில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே போல் அதே பகுதியைச் சேர்ந்த காத்தையன் என்பவரது வீட்டில் இருந்த வேப்ப மரம் பலத்த காற்றால் அவரது வீட்டின் மீது விழுந்தது. இதில் அவரது வீடும் சேதமானது. இது போன்று பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமாகியது. மேலும் பல இடங்களில் நேற்று பெய்த மழைக்கு தண்ணீர் வடிய வழியின்றி தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் முத்துப்பேட்டை பகுதியில் நேற்று இடி, மின்னல், சூராவளி காற்றுடன் கூடிய கன மழையால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...