Pages

Wednesday, September 2, 2015

தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டி தேர்தலில் போட்டியிட மஹல்லாவாசிகள் ஆர்வம் !

அதிரை தரகர்தெருவில் ( ஆஷாத் நகர் ) அமைந்துள்ள முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் முன்னிலையில் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்காக வேட்பாளர்களிடமிருந்து இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

இதில் தரகர்தெரு பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 11 பேர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தவர்களின் விவரங்கள் முகைதீன் ஜும்மா பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை எதிர்வரும் அன்று [ 08-09-2015 ] திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு எதிர்வரும் 13-09-2015 அன்று தேர்தல் நடத்தப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இறுதியில் 9 பேர்கள் பள்ளி நிர்வாக பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 
 
 
 
 
 

பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்தவர்களின் விவரங்கள்:

3 comments:

 1. எந்த பிரச்சனையாக இருந்தாலும் முஹல்லா வாசிகள் காவல்நிலயத்திற்கோ , கோர்ட் என செல்லாமல் தெரு பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு வந்தனர் தற்போது நிலைமை அவ்வாறில்லை. இதற்க்கு முந்திய நிர்வாகம் பல முயற்சிகள் மேற்கொண்டு தெரு நலனிற்காக பாடுபட்டனர் அவர்கள் மீதுக்கொண்ட கால்புனர்ச்சியால் பிரச்சனைகள் உண்டாக்கி பல குழுக்களாக உருவெடுத்தது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை தெரு பஞ்சாயத் மாற்றுவது முரணானது, அருகில் உள்ள தெருவிற்கு தண்ணீர் தொட்டி அமைக்க தடையாக இருப்பது நிலம்; அது வக்குப் போர்டில் இருப்பது தான். இதே நிலைமை இங்கே வரவேண்டும் என்று நினைப்பது மேலே போட்டியிடும் நபர்கள் தான் காரணம் ஒவ்வொரும் தன்னை பாதுகாத்துக்கொள்ள ஒரு குழுவாக இருக்கிறார்கள். பல குழுவாக இருக்கும் முஹல்லாவில் தேர்தல் நடந்தாலும் அமைதியும், தெரு முன்னேற்றமும் காணல் நீர் தான். தற்போதுள்ள நிர்வாகம் அரசு அதிகாரிக்கோ அல்லது கிராம நிர்வாகத்திற்கு கட்டுப் படாதவர்கள் எப்படி அமைதி கொண்டு வரமுடியும்?

  ReplyDelete
  Replies
  1. எந்த பிரச்சனையாக இருந்தாலும் முஹல்லா வாசிகள் காவல்நிலையத்திற்கோ , கோர்ட் என செல்லாமல் தெரு பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு வந்தனர் தற்போது நிலைமை அவ்வாறில்லை.

   அருகில் உள்ள தெருவிற்கு தண்ணீர் தொட்டி அமைக்க தடையாக இருப்பது நிலம்; அது வக்ஃப் போர்டில் இருப்பது தான். இதே நிலைமை இங்கே வரவேண்டுமா..???

   மஸ்தான் கனி காக்கா வின் இந்த இரு கருத்தில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.
   மேலும் தெருவாசிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தெரு நலனில் அக்கறை செலுத்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...

   Delete
 2. தரகர் தெரு என்கிற பெயர் அதிராம்பட்டினத்தின் வரலாற்றோடு தொடர்புடையது; வரலாற்றை பறைசாற்றுவது ஆகும்.

  இந்தப் பெயரை ஆசாத் நகர் என்று மாற்ற வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...