Pages

Wednesday, September 9, 2015

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா !

அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஆசிரியை திருமதி எஸ் ஆஃப்தாப் பேகம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, பெற்றோர் ஆசிரியர் கழக இணைச்செயலாளர் எம்.எஃப் முஹம்மது சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மேலாளரும், முன்னாள் தலைமை ஆசிரியருமாகிய எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் ஆசிரியர் தின உரை நிகழ்த்தினார்.

விழாவில் பள்ளி மாணவர்கள் ஆசிரியரின் சிறப்பு குறித்து வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். சிறப்பான ஆசிரியப்பணியை பாராட்டி இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியைகள் சுமித்ரா, கிரேஸ் செல்லாராணி, பாக்கியலட்சுமி ஆகிய 3 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவற்றை பள்ளியின் மூத்த முதல்வர் பேராசிரியர் பர்கத் வழங்கி கெளரவித்தார்.

முன்னதாக பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி பாக்கியலெட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழாசிரியர் பி. பார்த்த சாரதி இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் என். இத்ரீஸ் அஹமது நன்றி கூறினார். இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், மாணவர்கள்  உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...