Pages

Thursday, September 3, 2015

செடியன் குளம் நடைபாதை புனரமைக்கும் பணி தீவிரம் !

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் வரத்து அதிகரித்தது. பொதுமக்கள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

செடியன் குளத்தின் தென்கரையில் பழுதடைந்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் வழியே கசிந்து வீணாக வெளியேறும் குளத்தின் நீரை பாதுகாக்கும் பொருட்டு கிண்ணற்றின் அடியில் உள்ள ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈடுபட்டது.

செடியன் குளம் நடை பாதை, மேடு பள்ளமாக இருப்பதால் இந்த சாலை வழியே கடந்து செல்லும் வாகனங்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக மழை காலங்களில் வழுக்கி கீழே விழுந்து அடிபட்டு எழுந்துசெல்லும் நிலை இருந்து வந்தது.

24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டத்துடன் இருந்து வரும் செடியன் குளம் பாதை, ஈசிஆர் சாலை - மேலத்தெரு - சிஎம்பி லேன் ஆகிய முக்கிய பகுதிகளை இணைக்கக்கூடிய பிரதான பகுதியாக இருந்து வருவதால், மூன்று பகுதிகளை இணைக்கும் விதத்தில் 'கிராம இணைப்பு சாலை' திட்டத்தின் கீழ் புதிய சாலை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மேலத்தெருவை சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து வழங்கும் நிதி உதவியுடன் செடியன் குளம் நடை பாதையை புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த 'சமூக ஆர்வலர்' மு.மு கமருதீன் அவர்களின் மேற்பார்வையில் கடந்த இரண்டு நாட்களாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பாதை வழியே வாகனங்கள் இலகுவாக கடந்து செல்லவும், வயோதிகர்கள், மாணவர்கள் எவ்வித சிரமமின்றி நடந்து செல்லவும் குளக்கரையின் நடை பாதை மணலால் உயர்த்தி அகலப்படுதப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக ஜேசிபி இயந்திரம், டிராக்டர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

2 comments:

  1. அதிரை ஏ ஜே நகரில் காலங்காலமாக சாக்கடை நீர் வடியாமல் கொசுத்தொல்லையால் பல அவலங்களை கண்டு வருகிறொம். அதிரை நியூஸ் நேரில் வந்து ஆய்வு செய்து பேரூராட்சிக்கு தெரிவிக்கும்படி பொதுமக்கள் சார்பாக கஎட்டுக்கொல்கிறென்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...