Pages

Wednesday, September 2, 2015

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் சாலைமறியல் !

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், அகில இந்திய , தமிழக விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் இன்று காலை 11.30 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டையில் பக்கிரிசாமி, மார்க்ஸ்,செல்வம், கந்தசாமி, அதே போல கரம்பயம் பகுதியில் கலியபெருமாள், பெஞ்சமின், மாரிமுத்து, துரைமாணிக்சம், துவரங்குறிச்சி பகுதியில் கோவிந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ராஜ ராமலிங்கம், அதிராம்பட்டிணம் பகுதியில் காளிதாஸ், சோமசுந்தரம், முனுசாமி, ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

சாலைமறியலில் ஈடுபட்டவர்கள், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும் மத்திய மாநில அரசின் நடவடிக்கையினை கண்டித்தும், காப்பீட்டுத்துறை, ரயில்வே, பாதுகாப்புத்துறையில் அந்திய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை கண்டித்தும்,விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையினை அறவிக்க கோரியும், கடை மடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் விடக்கோருதல் உள்பட பல்வேற கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் நடைபெற்றது. 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

நன்றி: 'நிருபர்' ராஜா, பட்டுக்கோட்டை
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...