Pages

Saturday, September 12, 2015

வாய்க்கால் தெரு ரேஷன் கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை ! புகார் அளிக்க முடிவு !!!

அதிரை நடுத்தெரு கீழ்புறம், வாய்க்கால் தெரு, புதுத்தெரு ஆஸ்பத்திரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தக்வா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 1 ம் நம்பர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை இந்த பகுதியை சேர்ந்த முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் ஒருவர் ரேஷன் பொருள் வாங்கச்சென்றுள்ளார். ரேஷன் அரிசி தரவேண்டும் என்றால் மைதா, ஆட்டா பேக்கிங் செய்த பாக்கெட்களை வாங்க வேண்டும் என கூறிய கடைகாரர், ஆசிரியரிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்துள்ளார். வேறுவழியின்றி மைதா, ஆட்டா மாவை வாங்கிய ஆசிரியர் வீட்டிற்கு வந்ததும் பேக்கிங் செய்த பாக்கெட்டை பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் பொருளை உபயோகிக்கும் தேதி முடிந்து மாதங்கள் சில கடந்துவிட்டது. மேலும் காலாவதியான மைதா, ஆட்டா மாவு துர்நாற்றம் வீசியதாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்களை கட்டாயப்படுத்தி காலாவதியான பொருட்களை விற்பனை செய்து வரும் இதுபோன்ற நிகழ்வு பலமுறை தொடர்வதால் ஆசிரியர் உட்பட ஆவேசப்படும் இப்பகுதியினர் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசி கடத்தலில் ஈடுபட்ட இதே ரேஷன் கடை ஊழியரை  இந்த பகுதியை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறை மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடையில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மைதா மற்றும் ஆட்டா மாவு
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...