Pages

Tuesday, September 1, 2015

கலாம் காலிபர் ஷூ’வுக்காக CMN சலீம் தரும் யோசனை !

போலியோவால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் பயன்படுத்தும் காலிபர் ஷூ, 3 முதல் 5 கிலோ எடையில் மெட்டல் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆனதாக இருக்கும். இந்த காலிபர்களை அணியவும், நடக்கவும் மாற்றுத்திறனாளிகள் படும் வேதனையை மற்றவர்களால் உணர முடியாது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் காலிபரின் மேல் விளிம்பு தொடையிலும், மூட்டிலும் முட்டி மோதி கடுமையான வலியை ஏற்படுத்தும்.

இத்தகைய மாற்றுத்திறனாளிகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஏவுகணையின் எடையைக் குறைக்க பயன்படுத்தப்படும் பாலி புரோபைலின் எனப்படும் ‘தெர்மோ பிளாஸ்டிக் பாலிமரை’ கொண்டு வெறும் 400 கிராம் எடையில் காலிபர் ஷூவை மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் உருவாக்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினர் தற்போது வழங்கும் எடை அதிகம் கொண்ட மெட்டல், பிளாஸ்டிக் காலிபர்களைத் தவிர்த்து, கலாம் பரிந்துரைத்த எடை குறைவான காலிபர் ஷூவை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூக நீதி அறக்கட்டளை நிறுவனரும், பிரபல கல்வியாளருமாகிய  CMN சலீம் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிந்திருக்கும் யோசனை:
'தமிழகத்தில் 1.5 இலட்சம் மாற்றுத்திறநாளிகள் வாழ்கின்றனர். சாலை விபத்துகளில் கை, கால்ககளை இழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கு இலவசமாக செயற்கை மெட்டல் ஷூ வழங்குகின்றனர்.

அதிக எடை கொண்ட (4 kg) இதை அணிந்துகொண்டு வலியோடும் வேதனையோடும் வாழ்வை ஓட்டுகின்றனர். ஓடி ஆடி உழைப்பதற்கு உள்ளம் துடிக்கின்றது.ஆனால் உடல் முடங்கிபோய் கிடக்கின்றனர்.

அப்துல் கலாமின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பு தான் எடை குறைந்த
பாலி புரோபைலின் ஷூ (400 g) மாற்றுத் திறனாளிகள் வாழ்வில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். விலை ஏறக்குறைய 10 ஆயிரம் ரூபாய்.

இப்படி சிந்தித்துதான் பார்ப்போமே. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,620 கிராம பஞ்சாயத்துகள் எப்படி பார்த்தாலும் குறைந்தது 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் வெள்ளி தோறும் ஜும்ஆ நடைபெறுகிறது. கிராம புறங்களில் உள்ள 4 ஆயிரம் பள்ளிகளை தவிர்த்துவிட்டு மீதம் உள்ள 6 ஆயிரம் பள்ளிகளில், இறைவன் நாடினால், வருகின்ற ரமலான் மாதத்தின் ஒவொரு ஜும்ஆ விலும் குறைந்தது 6 நபருக்கு இந்த அப்துல் கலாம் காலிபர் ஷூ வை பள்ளிவாசல் சார்பாக வழங்கினால், தமிழகத்தில் உள்ள 1.5 இலட்சம் மாற்றுத்திறனாளிகளும் 4 வெள்ளிக் கிழமைகளில் மறுவாழ்வு பெறுவார்.

மக்கள் தங்கள் உள்ளங்களில் பள்ளிவாசல்களை காட்டுவர் இந்திய சமூகத்திற்கு இயல்பாகவே ஒரு குணம் உண்டு. நெருக்கடியான நேரத்தில் தனக்கு உதவியவனை தான் இங்கே குல தெய்வமாக கும்பிடுகின்றனர்' என யோசனை கூறியுள்ளார்.

1 comment:

  1. சகோ CMN சலீம் அவர்களின் யோசனையை ஏற்று இஸ்லாமிய சமுதாய சொந்தங்கள் தங்களின் பங்களிப்பை உறுதிபடுத்தி கொண்டால் வஞ்சிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை சந்தோசமாக மேற்கொள்வார்கள்.
    இது போன்ற சமூகநல மேன்பாட்டுக்கு சமுதாய இயக்கங்களும் முன் நின்று செயல்பட வேண்டும்.இறைவனின் அருள் பொருந்திய இத்தகைய நல்லறங்கள் செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...