Pages

Wednesday, September 9, 2015

விநாயகர் ஊர்வலப் பாதையை நீதிமன்ற உத்தரவுப்படி முழுமையாக அமுல்படுத்த வேண்டும்: INTJ வலியுறுத்தல் !

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளரும்,
ஏ. முஹம்மது ஷிப்லி திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வருடந்தோறும் விநாயகர் ஊர்வலத்தில் நிகழும் மத மோதல்களை தவிர்த்திட கடந்த 2009ம் ஆண்டு முத்துப்பேட்டை மக்களின் சார்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் ஏ. முஹம்மது ஷிப்லி, மாற்றுப் பாதை கோரி அதற்குரிய வரைபடத்துடன் கூடிய பொது நல வழக்கு (எண்: WP. NO. 17277/09) ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கோகலே தலைமையிலான அமர்வு நீண்ட நேர வாதத் திற்குப் பின் அரசின் கருத்தையும் கேட்டறிந்து அளித்த உத்தரவில்,
மனுதாரர் அளித்திருக்கும் மாற்றுப் பாதையில் விநாயகர் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்றும் இதற்கான அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியது. ஆனால் அப்போதைய மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமுல்படுத்தாமல் ஊர்வலப் பாதையில் சிறிதளவு மட்டுமே மாற்றம் செய்தது.
மாவட்ட நிர்வாகம் மாற்றம் செய்த பாதையில் செல்லும் விநாயகர் ஊர்வலத்தால் ஏற்படும் வன்முறையை தடுக்க முடியவில்லை. இதனால் 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை விநாயகர் ஊர்வலத்தின்போது தொடர்ந்து மதப் பதட்டம் ஏற்படுவதும், வழக்குகள் பதிவாவதும் வாடிக்கையாகி விட்டது. காவல்துறையின் பதிவுகளே இந்த உண்மைகளுக்கு சான்றுகளாக உள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம் 2009ம் ஆண்டு வழங்கிய மாற்றுப் பாதை (எண் : WP. NO. 17277/09) உத்தரவை மாவட்ட நிர்வாகம் முழுமையாக அமுல்படுத்தி விநாயகர் ஊர்வலத்தை பட்டுக்கோட்டை சாலையில் அனுமதிக்காமல் மன்னார்குடி சாலை வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும்.
இதை தவிர்த்து ஆயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தி ஊர்வலம் நடத்தினாலும் வன்முறை நிகழ்வதை தவிர்க்க முடியாது என்பதை வருடந்தோறும் ஏற்படுகின்ற மதப் பதட்டமும் அசம்பாவிதச் சம்பவங்களும் உணர்த்துகின்றன.

2014ம் ஆண்டு பத்திரிகை செய்திபடி 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும் வன்முறையை அவர்களால் தடுக்க இயலவில்லை. அனைத்து வன்முறைகளும் காவல்துறையின் முன்னிலையிலேயே தான் நடந்தது என்பதாக உள்ளன. இதற்கு வீடியோ பதிவுகள் ஆதாரங்களாக உள்ளன.
மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி முத்துப்பேட்டை பகுதியில் அமைதி நிலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன் நகல் தலைமைச் செயலாளருக்கும், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அபு ஃபைஸல்
செய்தி தொடர்பாளர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

2 comments:

  1. விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாகவும், ரசாயன கலவை இல்லாததாக இருக்க வேண்டும். ஊர்வல பாதையை எந்த நேரத்திலும் மாற்றி அமைக்கும் உரிமை போலீசாருக்கு உண்டு. போக்குவரத்தை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது. சர்ச், மசூதி அமைந்துள்ள பாதையை தவிர்க்க வேண்டும். காலை, 11 மணியில் இருந்து மாலை ஆறு மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு, வெடியை பயன்படுத்த கூடாது. இரண்டு ஒலி பெருக்கிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் . வருவாய் துறை மற்றும் போலீஸாரின் விதிமுறைகளை பின்பற்றியே ஊர்வல பொறுப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாக உத்தரவு விட்டாலும் வருடந்தோறும் தமிழகத்தில் அசம்பாவிதம் நடக்கத்தான் செய்கிறது.

    தீபாவளி பண்டிகைகளில் காணப்படும் அமைதி, நல்லுறவு விநாயகர் ஊர்வலத்தில் காணப்படவேண்டும் என்று பெருமபாலோனர்கள் விரும்புகிறார்கள். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...