Pages

Friday, October 2, 2015

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: 04-10-2015 மற்றும் 11-10-2015

இந்திய தேர்தல் ஆணையத்தால் 01-01-2016 ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை தயார் செய்து 15-09-2015 அன்று வரைவு வாக்காளர் பட்டிய்ல் வெளியிடப்பட்டது, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 04-10-2015 மற்றும் 11-10-2015 ஆகிய இரு நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ( Booth Level Officers) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (Booth Level Agents) ஆகியோர் ஒருங்கிணைந்து வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல்-நீக்கல்- திருத்தம் ஏதேனும் இருப்பின் அவற்றைக் கண்டறிந்து தெரிவித்திட தேர்தல் ஆணையத்தால் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது,

வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்புக்கு பிறகு தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 2175 வாக்குச்சாவடிகள் உள்ளன, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (Booth Level Officers) 2175 பேர்; நியமிக்கப்பட்டு. அவர்களுக்கு உhpய முறையில் பயிற்சி வழ’;கப்பட்டுள்ளது, வரையறுக்கப்பட்ட அலுவலர்களாக (Designated Location Officers) மொத்தம் 1113 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து நாட்களிலும் ஆஜரில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர், 01-01-2016 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் படிவம் 6ல் விண்ணப்பம் செய்து தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்யலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தாம் வாக்களித்து வரும் வாக்குச்சாவடி மையத்திற்கு (Booth) சென்று தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதனை சரி பார்த்து உறுதி செய்துகொள்ளவும். தவறு ஏதும் இருப்பின். உரிய படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கேட்டுப் பெற்று. பூர்த்தி செய்து அளித்திட வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...