Pages

Tuesday, October 13, 2015

ஷார்ஜாவில் இருந்து கோவை சென்ற விமானத்தில் பறவை மோதி விபத்து: 100 பயணிகள் தப்பினர் !

ஷார்ஜாவில் இருந்து கோவை சென்ற விமானத்தில் பறவை மோதி விபத்து - 100 பயணிகள் தப்பினர். ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் தினந்தோறும் இயக்கப்படுகிறது. நேற்று (12/10/2015) காலை 4 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து கோவை சென்ற ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையத்தில் 100 பயணிகளுடன் தரை இறங்கியது.

ஓடுதளத்தில் ஏர் அரபியா விமானம் சென்ற போது எதிர்பாராதவிதமாக ராட்சத பறவை விமானத்தின் முன் பகுதியில் மோதியது. இதில் முன்பக்கம் சேதம் ஏற்பட்டது.

விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வழக்கம்போல் 4.30 மணிக்கு மீண்டும் சார்ஜாவுக்கு திரும்பிச் செல்லவேண்டும். சார்ஜாவுக்கு செல்ல கோவையில் இருந்து 166 பயணிகள் தயாராக இருந்தனர். பறவை மோதி விமானம் மோசமாக பாதிக்கப்பட்டதால் விமானத்தை இயக்க முடியாது என்று தெரியவந்தது.

இதனையடுத்து சார்ஜா செல்ல தயாராக இருந்த பயணிகள் அருகில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...