Pages

Monday, October 12, 2015

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு லண்டன்வாழ் அதிரையர் ₹1.25 லட்சம் மருத்துவ உதவி !

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனின் மருத்துவ செலவினங்களுக்காக லண்டன் வாழ் அதிரையரும், தொடர்ந்து அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ நிதிஉதவிகளை தொடர்ந்து செய்து வருபவருமான சமூக ஆர்வலர் எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது அவர்களால் லண்டனில் திரட்டப்பட்ட  ₹1.25 லட்சத்தை அதிரை நகர தமுமுக - மமக நிர்வாகிகளுக்கு நிதியை அனுப்பி நேரடியாக இராமநாதபுரம் சென்று சிறுவன் குடும்பத்தாரிடம் வழங்க கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அதிரை நகர தமுமுக - மமக நிர்வாகிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனை நேரடியாக சந்தித்து இராமநாதபுரம் மாவட்ட தமுமுக நிர்வாகிகள் முன்னிலையில் சிறுவனின் பெற்றோரிடம் மருத்துவ நிதி ₹1.25 லட்சத்தை ஒப்படைத்தனர். மருத்துவ நிதி உதவியை பெற்றுக்கொண்ட சிறுவனின் குடும்பத்தினர் உதவியளித்த லண்டன் வாழ் அதிரையர் மற்றும் தமுமுகவினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...